அடுத்த தொடரில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கம்!

தற்போது நடந்துவரும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு அந்த அணிக்கெதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டி20 போட்டியில் இந்தியா விளையாடுகிறது. ஜூன் 23-ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்-ல் கலக்கிய ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம் : ஷிகர் தவான், ரிஷப் பண்ட், அஜின்கியா ரஹானே, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ் சிங், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ்.

×Close
×Close