Royal Challengers Bangalore vs Kings XI Punjab: ஐபிஎல் 2019, தொடரில் நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது.
Live Blog
முருகன் அஷ்வின் ஓவரில் டி வில்லியர்ஸ் லாங் ஆஃப்-ல் ஒரு ஷாட் அடிக்க, பந்து நேராக கைக்கு வந்த போதிலும், ஸ்கிட் அடித்து பிடிக்குறேன் பேர்வழி, அதனை லோகேஷ் ராகுல் தவறவிட, தேவையில்லாமல் ஒரு பவுண்டரி கிடைத்தது.
சீன் போடுற நிலைமையில உங்க டீம் டார்கெட் வைக்கல கோவாலு!!
தற்போது கோலி, டி வில்லியர்ஸ் களத்தில் உள்ளனர். ஆனால் பெரும்பாலும் இவர்கள் இருவர் மட்டுமே ஆர்சிபி அணியில் சிறப்பாக பேட்டிங் செய்கின்றனர். அதற்கு பிறகு, வேறு எவருமே மேட்ச் வின்னிங் ஃபெர்மான்ஸ் கொடுத்ததில்லை. எனவே, இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வேண்டியது அஷ்வினுக்கு அவசியமாகும்.
5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்..
கண்ணாயிரம் - இந்தப் போட்டியில், இரு அணிகளும் ஜெயிக்கவே வாய்ப்புகள் இருக்கு. இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. ரவிச்சந்திர அஷ்வின் மற்றும் முருகன் அஷ்வின் ஆகிய இருவரும் இன்று தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
உமேஷ் யாதவின் லோ ஃபுல்டாஸ் பந்தில், க்ரிஸ் கெயில் அடித்த பந்து, லாங் ஆனில் நின்றுக் கொண்டிருந்த விராட் கைகளுக்கு எளிதாக செல்ல, அவர் அந்த கேட்சை நழுவவிட்டார். இந்த சீசனில் விராட் விடும் 3வது கேட்ச் இது. அதேபோல், இந்த சீசனில் பெங்களூரு விடும் 16வது கேட்ச் இது.
நன்றாக ஆடிக் கொண்டிருந்த பஞ்சாப் அணிக்கு இப்போது அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்துக் கொண்டிருக்கிறது. சாம் குர்ரன், 1 ரன்னில் மொயின் அலி ஓவரில் ஸ்வீப் ஷாட் ஆடச் சென்று எல்பிடபிள்யூ ஆனார்.
இவர் அவுட்டான பிறகு, மந்தீப் சிங்கை இறக்கி விட்டுள்ளார்கள்.
அடேய்களா... முதல்ல மந்தீப் சிங்கை தானே இறக்கியிருக்க வேண்டும்? சாம் குர்ரனை ஏன் இறக்கி விட்டீங்க?
சிக்ஸ் அடிச்சா உடனே அவுட்டாகிடுனும்-னு யாரோ சூனியம் வச்சிருப்பாங்க போல... பஞ்சாப் அணிக்கு இது வீழ்ந்த மூன்று விக்கெட்டுகளும், சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு அடுத்த பந்தில் விக்கெட்டாக மாறியுள்ளன.
லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், சர்ஃபரஸ் என மூவரும் சிக்ஸ் அடித்த அடுத்த பந்திலேயே அவுட்டாகியுள்ளனர்.
சதம் அடிச்சா நல்லா இருக்கும்-னு நாம சொல்லி வாயை மூடல... அதற்குள் சாஹல் ஓவரில் மாயங்க் அகர்வால் போல்ட்.
ராகுல், மாயங்க் ஆகிய இரு கர்நாடக பேட்ஸ்மேன்களும்., தீபக் சாஹர் ஓவரில் சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே அவுட்டாகி இருக்கின்றனர்.
காயம்பட்ட சிங்கத்தோடு மூச்சு..... யோவ் நிறுத்துயா!!
மாயங்க் அகர்வால் பற்றி நாம் நிறைய பேசியிருக்கிறோம். டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டுக்கும் ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஒரு அபார திறமைசாலி. எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. ஆனால், திறமையை சாதனையாக மாற்றுவதில் தான் அவர் சறுக்குகிறார்.
ச்சுமா ஒரு கற்பனை.. இன்றைய போட்டியில் அவர் சதம் அடித்தால் எப்படி இருக்கும்!!
என் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்...
தலைவா... இது பொதுக்கூட்டம் இல்ல... கிரிக்கெட் லைவ் அப்டேட்ஸ்...
இருந்தாலும், வணக்கம் சொல்றதுல இரு தப்பும் இல்லப்பா... சரி... இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் 160-170 வரும் என எதிர்பார்க்குறேன். இது அப்படிப்பட்ட ஒரு பிட்ச் தான். நிச்ச்யம், இது ரன்னிங் Feast உள்ள ஆட்டமாகத் தான் இருக்கும்.
எப்போதும் தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டும் க்ரிஸ் கெயில், தற்போது தொடக்கத்திலேயே அதிரடியை கையில் எடுத்துள்ளார். உமேஷ் யாதவ் ஓவரில், பவுண்டரி, சிக்ஸர் என பறந்து கொண்டிருக்கிறது.
உடனே உமேஷிடம் வந்து கேப்டன் கோலி தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
டே... அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா மொமன்ட்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights