ஐபிஎல் 2019 தொடரில் முதல் வெற்றிப் பெற்ற ஆர்சிபி! கங்கிராட்ஸ் கோலி!

RCB vs KXIP 2019 Match: பெங்களூரு வெற்றி

IPL 2019, RCB beat KXIP

Royal Challengers Bangalore vs Kings XI Punjab: ஐபிஎல் 2019, தொடரில் நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது.

Live Blog

23:38 (IST)13 Apr 2019
ஆர்சிபி வெற்றி

நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. 19.2வது ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு 174 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

23:36 (IST)13 Apr 2019
19.2

ஸ்டாய்னிஸ் - 2

23:36 (IST)13 Apr 2019
19.1 - பவுலர் சர்ஃபரஸ் கான்

ஸ்டாய்னிஸ் - 4

23:35 (IST)13 Apr 2019
ஆர்சிபி ஜெயிச்சாச்சு

கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை... அப்போ ஆர்சிபி ஜெயிச்சாச்சு!!! ஹூ..ஹூ..ஹூ

23:24 (IST)13 Apr 2019
பீல்டிங் சொதப்பலில் பி.ஹெச்டி வாங்கிய பஞ்சாப்

பரபரப்பான சூழலில் ஆட்டம் போய்க் கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் படு மோசமாக உள்ளது. இப்படியே போன, வெண்கல கிண்ணத்தை கூட வெல்ல முடியாது அஷ்வின்.... டீமை கட்டுக்குள் கொண்டு வாங்க!.

23:15 (IST)13 Apr 2019
விராட் அவுட்...

53 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் விராட் கோலி ஷமி ஓவரில், முருகனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். 

முருகனுக்கு அரோகரா!!

23:14 (IST)13 Apr 2019
126-1

15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது ஆர்சிபி அணி. எந்தவித அழுத்தமோ, பதட்டமோ, பயமோ எதுவுமே இன்றி ஆடி வருகிறார்கள் கோலியும், வில்லியர்சும்.

23:06 (IST)13 Apr 2019
பவுலிங்கில் ஒரு இன்ச்சாவது த்ரெட் வேண்டாமா?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பவுலிங்கில் எந்தவித தாக்கமும் இல்லை. ஒரு பரபரப்பு பதற்றம், பதட்டம் என்று ஒரு கருமத்தையும் அவர்களால் களத்தில் ஏற்படுத்த முடியவில்லை. இப்படி இருந்தால், கோப்பை ஜெராக்ஸ கூட உங்களால் பெற முடியாது.

23:03 (IST)13 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

அண்ணே... நீங்க என்ன சொல்லப் போறீங்க-னு தெரியும்...

தெரியும்-ல... அப்போ பேசாம இருக்கு... பட். பெங்களூரு வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. கோலியும், டி வில்லியர்சும் இப்போது அவுட்டானாலும் கூட, அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. 

22:50 (IST)13 Apr 2019
விராட் கோலி 50

பெங்களூரு அணி வெற்றியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்க, கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 

இதுவரை மனதை வென்ற அணி, இப்போது போட்டியை வெல்லப் போகிறதோ?

22:47 (IST)13 Apr 2019
இந்த ஸ்கிட் தேவையா?

முருகன் அஷ்வின் ஓவரில் டி வில்லியர்ஸ் லாங் ஆஃப்-ல் ஒரு ஷாட் அடிக்க, பந்து நேராக கைக்கு வந்த போதிலும், ஸ்கிட் அடித்து பிடிக்குறேன் பேர்வழி, அதனை லோகேஷ் ராகுல் தவறவிட, தேவையில்லாமல் ஒரு பவுண்டரி கிடைத்தது. 

சீன் போடுற நிலைமையில உங்க டீம் டார்கெட் வைக்கல கோவாலு!!

22:36 (IST)13 Apr 2019
இரண்டு விக்கெட் போச்சுன்னா...

தற்போது கோலி, டி வில்லியர்ஸ் களத்தில் உள்ளனர். ஆனால் பெரும்பாலும் இவர்கள் இருவர் மட்டுமே ஆர்சிபி அணியில் சிறப்பாக பேட்டிங் செய்கின்றனர். அதற்கு பிறகு, வேறு எவருமே மேட்ச் வின்னிங் ஃபெர்மான்ஸ் கொடுத்ததில்லை. எனவே, இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வேண்டியது அஷ்வினுக்கு அவசியமாகும்.

22:26 (IST)13 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்..

கண்ணாயிரம் - இந்தப் போட்டியில், இரு அணிகளும் ஜெயிக்கவே வாய்ப்புகள் இருக்கு. இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. ரவிச்சந்திர அஷ்வின் மற்றும் முருகன் அஷ்வின் ஆகிய இருவரும் இன்று தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். 

22:17 (IST)13 Apr 2019
அஷ்வின் ஸ்டிரைக்ஸ்...

பார்த்திவ் படேல், அஷ்வின் ஓவரை அடித்து ஆட முயல, அகர்வாலிடம் 19 ரன்களில் கேட்ச் கொடுத்து வீர நடை போட்டு வெளியேறினார்.

நமக்கு தான் ஹேன்ட் பவர் கிடையாது-னு தெரியும்-ல... அப்புறம் எதுக்கு தூக்கி அடிக்கணும் பட்டு?

22:14 (IST)13 Apr 2019
ஆர்சிபி மெச்சூர்ட் தொடக்கம்

பெங்களூரு தொடக்க வீரர்களாக பார்த்திவ் படேல், விராட் கோலி களமிறங்கியுள்ளனர். 3 ஓவர்கள் முடிவில் அந்த அணி 36 ரன்கள் எடுத்துள்ளது. கமான் ஆர்சிபி...

21:46 (IST)13 Apr 2019
174 ரன்கள் இலக்கு

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. க்ரிஸ் கெயில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

21:44 (IST)13 Apr 2019
20.0

கெயில் - 4 

21:43 (IST)13 Apr 2019
19.5

கெயில் - 0

21:42 (IST)13 Apr 2019
19.4

கெயில் -  4 ரன்கள்

21:42 (IST)13 Apr 2019
19.3

மந்தீப் - 1 ரன்

21:41 (IST)13 Apr 2019
19.2

கெயில் - 1 ரன்

21:40 (IST)13 Apr 2019
19.1

மந்தீப் - 1 ரன்

21:39 (IST)13 Apr 2019
அடக் கொடுமையே!! இத என்னத்த சொல்ல..

உமேஷ் யாதவின் லோ ஃபுல்டாஸ் பந்தில், க்ரிஸ் கெயில் அடித்த பந்து, லாங் ஆனில் நின்றுக் கொண்டிருந்த விராட் கைகளுக்கு எளிதாக செல்ல, அவர் அந்த கேட்சை நழுவவிட்டார். இந்த சீசனில் விராட் விடும் 3வது கேட்ச் இது. அதேபோல், இந்த சீசனில் பெங்களூரு விடும் 16வது கேட்ச் இது.

21:32 (IST)13 Apr 2019
எங்க போயிருக்க வேண்டிய மேட்ச் தெரியுமா?

முதல் 6 ஓவர்களில், பஞ்சாப் அடித்த ஸ்கோர் 60. இப்போது, 18 ஓவர்களில் 145. கிட்டத்தட்ட 40 ரன்கள் ஷார்டேஜ் ஆகியிருக்கிறது. இத்தனைக்கு க்ரிஸ் கெயில் களத்தில் இருந்தும்!!

21:19 (IST)13 Apr 2019
ம்ஹூ.. எனக்கு என்னமோ சரியா படலை!!

கணிப்பு கண்ணாயிரம் - 15 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் 4 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. என்ன தான் க்ரிஸ் கெயில் களத்தில் நின்றாலும், ஸ்கோர் 160-170 தான் வரும்னு நினைக்கிறேன்.

21:12 (IST)13 Apr 2019
இதுக்கு தான் அனுபவம் வேணும்-ங்கறது!

நன்றாக ஆடிக் கொண்டிருந்த பஞ்சாப் அணிக்கு இப்போது அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்துக் கொண்டிருக்கிறது. சாம் குர்ரன், 1 ரன்னில் மொயின் அலி ஓவரில் ஸ்வீப் ஷாட் ஆடச் சென்று எல்பிடபிள்யூ ஆனார். 

இவர் அவுட்டான பிறகு, மந்தீப் சிங்கை இறக்கி விட்டுள்ளார்கள். 

அடேய்களா... முதல்ல மந்தீப் சிங்கை தானே இறக்கியிருக்க வேண்டும்? சாம் குர்ரனை ஏன் இறக்கி விட்டீங்க?

21:05 (IST)13 Apr 2019
சர்ஃபரஸ் அவுட்

சிக்ஸ் அடிச்சா உடனே அவுட்டாகிடுனும்-னு யாரோ சூனியம் வச்சிருப்பாங்க போல...  பஞ்சாப் அணிக்கு இது வீழ்ந்த மூன்று விக்கெட்டுகளும், சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு அடுத்த பந்தில் விக்கெட்டாக மாறியுள்ளன.

லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், சர்ஃபரஸ் என மூவரும் சிக்ஸ் அடித்த அடுத்த பந்திலேயே அவுட்டாகியுள்ளனர்.

20:59 (IST)13 Apr 2019
102-2

12 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. 

என்ன தேடுறீங்க-னு தெரியுது... கெயில் களத்தில்... போதுமா!

20:50 (IST)13 Apr 2019
அடக் கொடுமையே!!

சதம் அடிச்சா நல்லா இருக்கும்-னு நாம சொல்லி வாயை மூடல... அதற்குள் சாஹல் ஓவரில் மாயங்க் அகர்வால் போல்ட். 

ராகுல், மாயங்க் ஆகிய இரு கர்நாடக பேட்ஸ்மேன்களும்., தீபக் சாஹர் ஓவரில் சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே அவுட்டாகி இருக்கின்றனர். 

காயம்பட்ட சிங்கத்தோடு மூச்சு..... யோவ் நிறுத்துயா!! 

20:44 (IST)13 Apr 2019
ச்சும்மா ஒரு சதம் அடிச்சா?

மாயங்க் அகர்வால் பற்றி நாம் நிறைய பேசியிருக்கிறோம். டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டுக்கும் ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஒரு அபார திறமைசாலி. எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. ஆனால், திறமையை சாதனையாக மாற்றுவதில் தான் அவர் சறுக்குகிறார். 

ச்சுமா ஒரு கற்பனை.. இன்றைய போட்டியில் அவர் சதம் அடித்தால் எப்படி இருக்கும்!!

20:36 (IST)13 Apr 2019
ராகுல் அவுட்

சாஹல் பந்தில் ஸ்ட்ரெய்ட்டில் ஒரு அபார சிக்ஸ் அடிக்க, அடுத்த பந்திலேயே மீண்டும் ஒரு சிக்ஸ் அடிக்க எண்ணி, இறங்கி வர, டிமிக்கி கொடுத்த பந்து டர்ன் ஆகி கீப்பர் கைகளில் செல்ல, 18 ரன்களில் நொந்து கொண்டே வெளியேறினார் ராகுல். 

ஏமாந்துட்டியே பங்கு!!

20:30 (IST)13 Apr 2019
4,6,4,0,6,4

முகமது சிராஜ், க்ரிஸ் கெயிலுக்கு வீசிய முதல் ஓவரில் அடிக்கப்பட்ட ரன்கள் இது...

சிராஜை இதைவிட சிறப்பாக யாரால் வரவேற்றிருக்க முடியும்!!?

க்ரிஸ் கெயில் ராக்ஸ்!

20:30 (IST)13 Apr 2019
4,6,4,0,6,4

முகமது சிராஜ், க்ரிஸ் கெயிலுக்கு வீசிய முதல் ஓவரில் அடிக்கப்பட்ட ரன்கள் இது...

சிராஜை இதைவிட சிறப்பாக யாரால் வரவேற்றிருக்க முடியும்!!?

க்ரிஸ் கெயில் ராக்ஸ்!

20:19 (IST)13 Apr 2019
கணிப்பு கண்ணாயிரம்

என் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்...

தலைவா... இது பொதுக்கூட்டம் இல்ல... கிரிக்கெட் லைவ் அப்டேட்ஸ்...

இருந்தாலும், வணக்கம் சொல்றதுல இரு தப்பும் இல்லப்பா... சரி... இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் 160-170 வரும் என எதிர்பார்க்குறேன். இது அப்படிப்பட்ட ஒரு பிட்ச் தான். நிச்ச்யம், இது ரன்னிங் Feast உள்ள ஆட்டமாகத் தான் இருக்கும்.

20:12 (IST)13 Apr 2019
இது அட்டாக் புலி....

எப்போதும் தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டும் க்ரிஸ் கெயில், தற்போது தொடக்கத்திலேயே அதிரடியை கையில் எடுத்துள்ளார். உமேஷ் யாதவ் ஓவரில், பவுண்டரி, சிக்ஸர் என பறந்து கொண்டிருக்கிறது. 

உடனே உமேஷிடம் வந்து கேப்டன் கோலி தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். 

டே... அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா மொமன்ட்...

20:05 (IST)13 Apr 2019
க்ரிஸ் கெயில் களத்தில்...

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் க்ரிஸ் கெயில், லோகேஷ் ராகுல் களமிறங்கினர். 

நீங்க அடிச்சதான் அப்பு உண்டு... பின்னாடி ஒருத்தனும் அடிக்கமாட்டான்.... பார்த்து பண்ணுங்க...

19:54 (IST)13 Apr 2019
பஞ்சாப் பேட்டிங்

டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 

Web Title:

Royal challengers bangalore vs kings xi punjab live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close