10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RR vs GT LIVE Score, IPL 2025
டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் - குஜராத் முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் - கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக மட்டையைச் சுழற்றினர். இந்த ஜோடியை உடைக்க ராஜஸ்தான் பவுலர்கள் கடுமையாக போராடினர்.
10 ஓவர்களுக்குப் பின், 39 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க வீரர் சாய் சுதர்சன் அவுட் ஆனார். அவருடன் ஜோடி அமைத்து அரைசதம் அடித்து அசத்திய கில் 84 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்த வந்த வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னுக்கும், ராகுல் தெவாடியா 9 ரன்னுக்கும் அவுட் ஆகி நடையைக் கட்டினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்து 50 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டையும், சந்தீப் சர்மா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 210 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜெய்ஸ்வால், - சூரியவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு, 12 ஓவர்களில் 166 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைதசம் கடந்த நிலையில், சூர்யவன்ஷி, 38 பந்துகளில் 7 பவுண்டரி 11 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நித்தீஷ் ராணா 4 ரன்களில் வெளியேறினார்.
அடுத்தத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரியான் பராக் – ஜெயஸ்வால் ஜோடி வெற்றியை உறுதி செய்தது. அதிரடியில் அசத்திய ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சருடன்’, 70 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரியான் பராக், 15 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, கரீம் ஜனத், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, யுத்வீர் சிங் சரக்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 7-ல் தோல்வி என 4 புள் ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. அதேநேரத்தில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது. அந்த அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவே நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
ராஜஸ்தான் - குஜராத் அணிகள் இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 7 போட்டியில் ராஜஸ்தான் ஒருமுறையும், குஜராத் 6 முறையும் வென்றுள்ளன. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் குஜராத் 58 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. குறிப்பிடத்தக்கது.