Advertisment

TNPL 2023 RTW vs NRK: கடைசி லீக் ஆட்டம்; திருச்சி அணியை வீழ்த்தி நெல்லை அபார வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் திருச்சி-நெல்லை அணிகள் இடையே நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
Ruby Trichy Warriors vs Nellai Royal Kings, 28th Match Tamil News

டி.என்.பி.எல். 2023: பால்சி திருச்சி - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதல்

Ruby Trichy Warriors vs Nellai Royal Kings, 28th Match Tamil News: 8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

Advertisment

இதில், வருகிற வெள்ளிகிழமை (ஜூலை 7) சேலத்தில் நடக்கும் முதல் தகுதிச் சுற்று போட்டியில் லைகா கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மறுநாள் சனிக்கிழமை (ஜூலை.08) சேலத்தில் நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் நெல்லை ராயல் கிங்ஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐ.பி.எல் தொடரைப் போலவே, முதல் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிடும். தோல்வி காணும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் 2வது தகுதிச் சுற்று போட்டியில் மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும். 2வது தகுதிச் சுற்று போட்டி ஜூலை 10ம் தேதியும், இறுதிப்போட்டி ஜூலை 12ம் தேதியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடக்கிறது.

இன்றைய போட்டி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடையும் நிலையில், இன்று நடக்க உள்ள கடைசி லீக் போட்டியில் பால்சி திருச்சி - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைகிறது. இன்றைய கடைசி லீக் போட்டியில் திருச்சி - நெல்லை அணிகள் மோதுகின்றன.

திருச்சி - நெல்லை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. திருச்சி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராஜ்குமார் 2 ரன்களிலும், சரண் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். திருச்சி அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

மழை விட்ட பின், திருச்சி அணி தொடர்ந்து விளையாடியது. திருச்சி அணியின் ஜாபர் ஜமால் 6 பவுண்டரிகளையும், 8 சிக்சர்களையும் விளாசி 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக திருச்சி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.

மழைக் காரணமாக, டக் வொர்த் லெவீஸ் முறைப்படி, 16 ஓவர்களில் 130 ரன்கள் எடுக்க வேண்டும் என நெல்லை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நெல்லை அணியில் தொடக்க ஆட்டக் காரர்களாக களம் இறங்கிய அருண் கார்த்திக் 13 ரன்களும் லக்‌ஷ்மேஷ சூர்யபிரகாஷ் 22 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். இதையடுத்து வந்த அஜிதேஷும் நிதிஷ் எஸ் ராஜகோபாலும் அதிரடியாக விளையாடினார்கள். அஜிதேஷ் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என 56 ரன்கள் எடுத்தார். நிதிஷ் எஸ் ராஜகோபால் 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என 35 ரன்கள் எடுத்தார்.

நெல்லை அணி 11.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 135 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Tnpl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment