இந்திய முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர ஷேவாக் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எதிரணிகளை தனது அதிரடிகளால் கலங்கடித்த ஷேவாக், சில சமயம் இந்திய ரசிகர்களையும் 'கலங்க' வைத்துள்ளார். தன்னுடைய விக்கெட் மிக முக்கியமானது என்று தெரிந்தும், சற்று கேஷுவலாக இருப்பதே இவரது ஸ்டைல். குறிப்பாக, ரன்னிங்கில் இவரது வேகம் ஆவரேஜ் தான். பேட்டிங்கில் காட்டும் வேகத்தில் கால் வாசியைக் கூட பவுலிங்கில் ஷேவாக் காட்டியதில்லை. இதனாலேயே, பல போட்டிகளில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி, நம்மையும் டென்ஷனாகி இருப்பார் மனிதர்.
குறிப்பாக, 2003-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், சச்சின் 4 ரன்னில் நடையைக் கட்ட, கேப்டன் கங்குலி 24 ரன்னில் வெளியேற, 360 ரன்கள் இலக்கை எட்ட, ஷேவாக் களத்தில் இருந்தால் வாய்ப்புள்ளது என்று அனைவரும் நினைத்தனர். அதற்கு ஏற்றார் போல், ஷேவாக்கும் சிறப்பாக ஆடி வந்தார். 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்த ஷேவாக் ரன் எடுக்க ஓடிய போது, டேரன் லேமானால் ரன் அவுட் செய்யப்பட்டார். கொஞ்சம் வேகமாக ஓடியிருந்தால், அந்த ரன் அவுட்டில் இருந்து தப்பித்து இருக்கலாம். வெற்றியோ, தோல்வியோ குறைந்தபட்சம் இந்தியாவின் சார்பில் ஒரு சதத்தையாவது பதிவு செய்திருக்கலாம். ஆனால், மெதுவாக ஓடி ரன் அவுட்டாகி வெளியேறினார் ஷேவாக்.
இதுபோன்று பல போட்டிகளில் அவர் மோசமாக ரன் அவுட் ஆகியிருக்கிறார். சில போட்டிகளில் அந்த கண்டத்தில் இருந்து தப்பித்தும் இருக்கிறார்.
குறிப்பாக, இலங்கைக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில், 104 ஸ்டிரைக் ரேட்டில், 46 ரன்னில் ஆடிக் கொண்டிருக்கும் ஷேவாக், எப்படி ரன் அவுட் ஆகிறார் என்று இந்த வீடியோவில் பாருங்கள்.