சி.எஸ்.கே-வின் கேப்டனாக இருந்து வரும் "தல" தோனியின் அருகில் இருந்து நிறைய பண்புகளை கற்றுக்கொண்டுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.
Ruturaj Gaikwad - MS Dhoni Tamil News: இந்திய கிரிக்கெட் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் பற்றி ரசிக்க நிறைய இருக்கிறது. அவர் குறித்து பேசிய மூத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஷ்வின் அவரது நேர்த்தியான பேட்டிங்கை பார்க்கும் போது "பிரபுதேவாவின் நடன அசைவுகள்" போன்று உள்ளது என்றும், அவர் வலைப் பயிற்சி செய்வதை நாள் முழுவதும் "காசு கொடுத்து பார்க்கலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தேர்வாளருமான கிரண் மோர் அவரை "எதிர்கால இந்திய கேப்டன்" என்று கூறினார்.
Advertisment
தற்போது நடந்து வரும் அயலர்ந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் நேற்று நடந்த 2வது ஆட்டத்தில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய ருதுராஜ் 43 பந்துகளில் 58 ரன்களை குவித்து அசத்தினார். இந்த ஆட்டத்தின் போது அவரது தலைமைப்பண்பு நன்றாகவே வெளிப்பட்டது. ஐ.பி.எல் தொடரில் நட்சத்திர வீரராக இருக்கும் ருதுராஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியின் அடுத்த கேப்டன் என்ற நிலைக்கு உயரும் அளவிற்கு பக்குவப்பட்டுள்ளார்.
சி.எஸ்.கே-வின் கேப்டனாக இருந்து வரும் "தல" தோனியின் அருகில் இருந்து நிறைய பண்புகளை அவர் கற்றுக்கொண்டுள்ளார். தோனி களத்தில் மற்ற வீரர்களிடம் ஆலோசனை நடத்தும் போது, 'ருதுராஜ் எங்கே இருக்கிறார்?' என்று நீங்கள் தேடினால், அவர் தோனி அருகில் தான் இருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார். இதேபோல், நிறைய போட்டிகளில் நடந்துள்ளது. தோனியிடம் இருந்து கற்றுக்கொண்ட சிலவற்றை ருதுராஜ் வெளிப்படுத்தி இருந்தார்.
Advertisment
Advertisement
இது குறித்து அவர் பேசுகையில், உண்மையில், தலைமைப் பணி மிகவும் சிக்கலான விஷயம் என்று நான் நினைக்கிறேன். மஹி பாய் எப்போதும் சொல்வது என்னவென்றால், ஒரு நேரத்தில் ஒரு விளையாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். தற்போதைய தருணத்தில் இருங்கள், எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எல்லோரும் ஹைப்பை உருவாக்குகிறார்கள் மற்றும் அது எதுவாக இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
நான் உண்மையில் சமூக ஊடகங்களைப் பார்த்து, என்னைப் பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிய விஷயங்களைக் கேட்கும் நபர் அல்ல. சி.எஸ்.கே-வில் நான் கற்றுக்கொண்ட பண்புகளில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன். களத்தில் எனது சிறந்ததை வழங்குவது, வீடு திரும்புவது, எனது நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.
தலைமைப் பண்பு என்பது 'நபருக்கு நபர்' வேறுபடுகிறது. என்னைப் பொறுத்தவரையில், விளையாடும் பத்து வீரர்களுக்கு அதிகபட்ச நம்பிக்கையை வழங்க வேண்டும். நான் அவர்களின் காலணிகளுக்குள் நுழைந்து, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் மற்றும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி யோசிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சில நேரங்களில் பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தங்கள் சொந்த திட்டங்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் தங்கள் கண்ணோட்டத்தில் விளையாட்டைப் பற்றி சிந்திக்கிறார்கள்.
எனவே, அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். விளையாட்டிற்குப் பிறகு, என்ன தவறு நடந்தது, நாம் எதை மேம்படுத்த முடியும் என்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கும். விளையாட்டில் என்னைப் பொறுத்தவரை, வீரர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதுதான் அதிகம். அவர்கள் முதலில் தங்களைத் தாங்களே பேக்-அப் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பல பரிந்துரைகளும் குழப்பத்தை உருவாக்குகின்றன; இதைத்தான் நான் நம்புகிறேன்." என்று ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil