புரோ கபடி லீக்: தமிழக அணியை வாங்கிய சச்சின்!

புரோ கபடி லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது..

2014-ம் ஆண்டு முதல், புரோபுரோ கபடி லீக்: தமிழக அணியை வாங்கிய சச்சின்! கபடி லீக் தொடர், ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. இதில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரட்ஸ், புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பை ஆகிய 8 அணிகள் விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இரண்டு முறை போட்டியை நடத்துவதை மாற்ற வேண்டும் என்றும், போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக 4 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நான்கு அணிகளில் தமிழக அணியும் ஒன்று.

சென்னையை (தமிழ்நாடு) தலைமையிடமாக கொண்ட இந்த அணியை, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தொழில் அதிபர் என்.பிரசாத் ஆகியோர் இணைந்து வாங்கியுள்ளனர். ஆமதாபாத் (குஜராத்) அணியை அதானி குழுமமும், லக்னோ (உத்தரபிரதேசம்) அணியை ஜி.எம்.ஆர். குழுமமும், அரியானா அணியை ஜெ.எஸ்.டபிள்யூ. குழுமமும் வாங்கி இருக்கின்றன. ஆனால், புதிய அணிகளின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

×Close
×Close