நேற்று(ஞாயிறு) தனது 85- வது விமானப்படை தினத்தை இந்திய விமானப்படை கொண்டாடியது. உலகின் நான்காவது சிறந்த விமானப்படையாக இந்திய விமானப்படை திகழ்வது நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயமாகும். இந்த நிகழ்வின் போது விளையாட்டு வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், விமானப்படை சீருடையோடு இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
இதன்பின், விமானப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சச்சின் வீடியோ ஒன்றையும் பேசி வெளியிட்டுள்ளார். சச்சினின் இந்த வீடியோவை அடுத்து, மற்ற இந்திய வீரர்கள் சிலரும், விமானப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சமூக தளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
சச்சினோடு தொடக்க வீரராக களமிறங்கி, எதிரணி பவுலர்களை பஞ்சர் ஆக்கிய முன்னாள் இந்திய வீரர் சேவாக்கும், இந்நாளில் பவுலர்களை பஞ்சராக்கி கொண்டிருக்கும் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
அதில், ரோஹித் வெளியிட்டிருக்கும் ட்வீட் செம என்று கூறலாம். அவர் தனது ட்வீட்டில், "ஒரு முன்னாள் விமானப்படை அதிகாரி இவ்வாறு கூறினார், 'எங்களை கண்டறிய, நீங்கள் நன்றாக செயல்பட வேண்டும். எங்களைப் பிடிக்க நீங்கள் வேகமாக செயல்பட்டே ஆக வேண்டும். ஆனால், எங்களை மிஞ்ச வேண்டுமெனில், நீங்கள் கண்டிப்பாக கிண்டல் செய்ய வேண்டும்'. நமது தேசம் எவ்வளவு வலிமையுடனும், ஆற்றலுடனும் இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று' என்று ரோஹித் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீரர்களின் இந்த ட்வீட்ஸ் பலராலும் பாராட்டப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.
On Indian #AirForceDay, I salute our brave Air Force personnel. Thank you for all the selfless & courageous services. जय हिन्द ???????????? pic.twitter.com/Je4b6aCnk8
— sachin tendulkar (@sachin_rt) 8 October 2017
Best wishes and gratitude to our courageous air warriors & their families on #AirForceDay
— Virender Sehwag (@virendersehwag) 8 October 2017
On #AirForceDay, my regards & salute to the #airwarriors of our nation who defend our skies at all times. Jai hind????????☺️☺️
— Shikhar Dhawan (@SDhawan25) 8 October 2017
'To find us, you must be good...to catch us, you must be fast but to beat us, you must be kidding' said one of the Indian Air Force personnel. It only shows how stronger and powerful this nation has become. Salute ????#AirForceDay #JaiHind ????????
— Rohit Sharma (@ImRo45) 8 October 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.