ஷேவாக்கிற்கு ‘உல்டா’ பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சச்சின்!

ஆனால், சச்சினோ மிகவும் வித்தியாசமான முறையில் ஷேவாக்கின் பிறந்தநாளுக்கு 'உல்டா' வாழ்த்து தெரிவித்து அசத்தியுள்ளார்

By: Published: October 20, 2017, 2:26:56 PM

இந்திய கிரிக்கெட் அணியில் எவ்வளவோ அதிரடி பேட்ஸ்மேன்களை பார்த்திருப்போம், ரசித்திருப்போம். ஆனால், அந்த அதிரடிக்கே பிடித்த ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது வீரேந்திர ஷேவாக்காக தான் இருக்க முடியும். தொடக்க வீரராக களமிறங்கும் போது, ஷேவாக் கண்களில் ஒரு சிறு பதட்டமும், பயமும் தெரியும். அவுட்டாகிவிடக் கூடாது என்பதால்… ஆனால், அதைவிட பெரிய பயமும், பதட்டமும் அவருக்கு பந்துவீசும் பவுலர்களுக்கு இருந்தது. ஏனெனில், முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவதுதான் ஷேவாக் ஸ்டைல்.

ஷேவாக்கிற்கு பக்கபலமாக நின்று அவரை வழிநடத்தியது சச்சின் டெண்டுல்கர் என்றால், அது மிகையாகாது. சச்சின் – ஷேவாக் ஜோடி உலகின் மிக அபாயகரமான ஜோடிகளில் ஒன்றாக திகழ்ந்தது.

அப்படிப்பட்ட அபாயகரமான ஷேவாக்கிற்கு இன்று(அக்.,20) 39-வது பிறந்தநாள். பல கிரிக்கெட் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். என்னதான் அனைவரும் ஷேவாக்கிற்கு வாழ்த்து தெரிவித்தாலும், சச்சின் வாழ்த்துவது போன்று அமையுமா!

ஆனால், சச்சினோ மிகவும் வித்தியாசமான முறையில் ‘உல்டா’ வாழ்த்து தெரிவித்து அசத்தியுள்ளார்.

சச்சின் தனது வாழ்த்தில், “பிறந்தநாள் வாழ்த்துகள் விரு! இந்த புதிய வருடம் உங்களுக்கு மிகச் சிறப்பானதாக இருக்கட்டும். கிரிக்கெட் களத்தில் நான் என்ன செய்யச் சொன்னாலும், அதை அப்படியே உல்டாவாக செய்வாயே!” என்று கிண்டலாக தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தனது வாழ்த்து ட்வீட்டை தலைகீழாக (உல்டாவாக) பதிவிட்டு அசத்தியுள்ளார் சச்சின். கிரிக்கெட் ரசிகர்களால் சச்சினின் இந்த ட்வீட் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sachin tendulkars ulta wish for virender sehwag on 39th birthday

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X