Advertisment

Cricket World Cup 2019: இந்திய அணியின் பலம் - பலவீனம் அலசுகிறார் சடகோபன் ரமேஷ்! #IETAMIL Exclusive

CWC 2019: ஒரு World Class All Rounder-னு சொல்ற மாதிரி எனக்கு தெரிஞ்சு நம்ம டீமுல யாருமே இல்ல

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket world cup 2019 sadagoppan ramesh about indian cricket team world cup preview - CWC 2019: இந்திய அணியின் பலம் - பலவீனம் அலசுகிறார் சடகோபன் ரமேஷ்! #IETAMIL Exclusive

Cricket world cup 2019 sadagoppan ramesh about indian cricket team world cup preview - CWC 2019: இந்திய அணியின் பலம் - பலவீனம் அலசுகிறார் சடகோபன் ரமேஷ்! #IETAMIL Exclusive

உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர், இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இங்கிலாந்தில் கண்டிஷன் ஆசிய நாடுகளுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

Advertisment

இந்த உலகக் கோப்பை குறித்து ரசிகர்களுக்குள் இருக்கும் பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, இந்திய அணியின் பலம், பலவீனம் குறித்தும், இதர பல தகவல்கள் குறித்தும் நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் டெக்னிக்கலாக அலசுகிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ்.

90ஸ் கிட்ஸின் நாஸ்டாலஜி கிரிக்கெட் மொமன்ட்ஸில் தவிர்க்க முடியாத இந்திய கிரிக்கெட்டர்கள் பட்டியலில் நிச்சயம் சடகோபன் ரமேஷுக்கும் இடமுண்டு. சோயப் அக்தரை கேஷுவலாக விளாசுவதில் தொடங்கி, எதிரணி எப்பேற்பட்டதாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பவுண்டரிகளை பறக்க விடுவது வரை, இவரது ஃபேவரைட் தருணங்கள் ஏராளம்.

இனி சடகோபன் ரமேஷின் வார்த்தைகள் ரசிகர்களுக்காக அவரது மாடுலேஷனிலேயே,

வெயில் செம காட்டு காட்டுதுல்ல... இங்கிலாந்து-ல நடக்குற இந்த வேர்ல்டு கப் தொடரும் அப்படித் தான் காட்டப் போகுது.

பத்து, பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வர, அவுட் ஸ்விங் போட்டா வெளில அடிக்கணும், இன் ஸ்விங் போட்டா நேரா ஆடணும்-ங்கற Copy Book Style-ல இருந்து வெளில வந்து இன்னைக்கு எல்லா அணியும் ஒன்டே கிரிக்கெட்டுக்கு ஏத்த மாதிரி தங்களை Adopt பண்ணிக்கிட்டாங்க.

373, 361, 358, 359, 340, 341, 351, 297-னு ஸ்கோர் இங்கிலாந்துல சமீபத்திய போட்டிகள்ல அடிக்கப்பட்டிருக்கு. இங்கிலாந்துல பெரும்பாலான பிட்சுகள் இப்போ பேட்டிங்குக்கு ஏத்த மாதிரி இருக்கு. இப்படிப்பட்ட களங்கள்ல தான் இந்த வேர்ல்டு கப் நடக்க இருக்கு. ஒன்டே மேட்சே டோட்டலா மாறிப் போச்சு. உலகத்துல எந்த மூலைக்கு போனாலும், ரசிகருங்க விரும்புற விஷயம், ஒரு டீம் முன்னூறு அடிக்கணும், இன்னொரு டீம் அதை சேஸ் பண்ணி 301 அடிக்கணும், இல்ல கிட்ட வரணும். மொத்தமா அன்னைக்கு 600 ரன்னு அடிக்கணும். இது தான் அவங்க எதிர்பார்க்குற விஷயம். இவ்ளோ ஏன், இப்போ ஆஸ்திரேலியா போங்க... அங்க எல்லாம் பேட்டிங் பிட்சா இருக்கு. ஆஸ்திரேலியாவே அந்த மாதிரி மாறிடுச்சு.

ஏன்னா, மக்கள் விரும்புற விஷயம் சிக்ஸும், ஃபோரும் தான். அதுக்கு அடுத்தது தான் விக்கெட்டு. ஸோ, ஒன்டே-க்கு ஏத்த மாதிரி உலகம் பூரா விக்கெட்ஸும் ரெடி பண்ணிட்டாங்க. அந்த விஷயத்துல I Really Pity the bowlers. அதனால, இந்த உலகக் கோப்பையில ஓடி வந்து அழகா லைன் அன்ட் லென்த்துல போடுறது-லாம் போதாது. கொஞ்சம் வேரியேஷன் வேணும், ஸ்லோ பால் வேணும், யார்க்கர்ஸ் வேணும், Deceptive Bowlers மட்டுமே இனி சர்வைவ் ஆவாங்க. இதை சரியாக செய்யக் கூடிய அணி தான், இந்த உலகக் கோப்பையில சிறப்பா பெர்ஃபார்ம் பண்ணப் போறாங்க.

அந்த வகையில, இந்த வேர்ல்டு கப்புல, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து (அ) தென்னாப்பிரிக்கா... இவங்க தான் லீக் தாண்டி செமி பைனலுக்கு வருவாங்கன்னு எதிர்பார்க்குறேன். குறிப்பா இங்கிலாந்து.... அவங்களும் ஒரு Un-orthodox Cricket-ஐ அடாப்ட் பண்ணிக்கிட்டாங்க. மடக்கி அடிக்கலாம், மடக்கி அடிக்குறது தப்பில்ல, சிக்ஸுக்கு போகலாம். ஸ்டிரைக் ரேட்டை மெயின்டெய்ன் பண்ணலாம்-னு எல்லாத்துக்கும் தங்களை மாத்திக்கிட்டாங்க.

இந்தியாவை பொறுத்தவரை, ஒருநாள் போட்டிகளில் நாம் பலமாக அணியாக இருக்குறோம். விராட் கோலி ஒரு தூண் மாதிரி எல்லா மேட்சுலயும் நின்னு ரன்னு அடிச்சிட்டு இருக்காரு. அவரது ஈடு இணையற்ற பெர்ஃபாமன்ஸ் தான் நம்முடைய அணி வெளிப்படுத்தும் வெற்றிக்கு காரணமா இருக்கு. அதேமாதிரி, ஏற்கனவே உலகக் கோப்பையை நமக்கு ஜெயிச்சுக் கொடுத்திருக்குற ஒரு கேப்டனும் நம்ம டீமுல இருக்காரு... தோனி!

பட், இவங்க ரெண்டு பேரோட காம்பினேஷன் எந்தளவுக்கு இந்த உலகக் கோப்பையில ஒர்க் அவுட் ஆகப் போகுது-ங்கறது ரொம்ப முக்கியம். அதை நாம வெயிட் பண்ணி தான் பார்க்கணும். அதுபோல, பும்ரா, புவனேஷ், ஷமி-னு ஒரு வலுவான ஃபார்ஸ்ட் பவுலிங் லைன் அப் நமக்கு கிடைச்சிருக்கு. பீல்டிங்குலயும் நாம வலுவா இருக்கோம். ஏன்னா, அந்தளவுக்கு கோலி டீமுல உள்ள அனைவரையும் ஃபிட்னஸ்-ஸ மெயின்டெய்ன் பண்ண வச்சிருக்காரு.

ஆனா, இங்க முக்கியமான விஷயம் என்னன்னா, அதாவது பலவீனம் என்னன்னா, மற்ற டீமோடு கம்பேர் பண்ணும் போது, நம்ம டீமோடு ஆல் ரவுண்டர்ஸ் அந்தளவுக்கு நம்மக்கிட்ட சிறப்பாக இல்லையோ-னு சிறிய ஐயப்பாடு இருக்கு. Mild Doubt இருக்கு. ஸோ, ஹர்திக் பாண்ட்யா மேல பிரஷர் பயங்கரமா விழ வாய்ப்பு இருக்கு. ஏன்னா, அவருக்கு அடுத்தபடியா ரவீந்திர ஜடேஜாவை ஒரு 'ஆல்ரவுண்டர் னு சொல்லலாம்'. அவ்வளவு தான். அவர் ஒரு 30 ரன் அடிச்சு, 2 விக்கெட் வரை எடுப்பார்-னு எதிர்பார்க்கலாம். அவ்ளோ தான். ஆனா, ஒரு World Class All Rounder-னு சொல்ற மாதிரி எனக்கு தெரிஞ்சு நம்ம டீமுல யாருமே இல்ல.. ஹர்திக் பாண்ட்யா ஒரு ஹோப்பா இருக்காரு.. ஆனால், அந்த ஹோப்பை கன்வெர்ட் பண்ணுவாரா-ங்கறதை இந்த வேர்ல்டு கப்புல தான் நாம பார்க்கணும். Ben Stokes மாதிரி ஒரு தரமான ஆல் ரவுண்டர் பங்களிப்ப அவரால், இங்கிலாந்துல, அதுவும் வேர்ல்டு கப் மாதிரியான டோர்னமென்ட்-ல தர முடியுமா-ங்கறத இனிமே தான் பார்க்கணும்.

ஆனா, ஒன்னு சொல்லணும் விரும்புறேன். நான் முன்னாடி சொன்ன Deceptive Bowling இந்தியாவில் பும்ராவிடம் அதிகமாவே இருக்கு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இருந்த பவுலர்களிலேயே ஒரு பெர்சன்ட்டாவது அதிக புத்திசாலி பவுலர்-னா அது பும்ரா மட்டும் தான். அவரது புத்திசாலித்தனம் தான் அவரை தனித்துக் காட்டுகிறது.

அப்புறம் இன்னொரு விஷயம்... இந்தவாட்டி நமக்கு ஒரு பெரிய Challenging காத்திருக்கு. முன்னாடிலாம் உலகக் கோப்பை-ல Group A, B, C னு பிரிச்சு ஆடுவாங்க. அப்போ, உங்க குரூப்ல மேக்ஸிமம் ரெண்டு டீமு தான் டஃப்பா இருக்கும். ஆனா, இந்த 2019 வேர்ல்டு கப்புல, நீங்க எல்லா டஃபான டீமையும் ஃபேஸ் பண்ணியாகணும். It's Definitely a lot of Pressure. பட், ஒரு கிரிக்கெட் ரசிகனா நீங்க பார்த்தீங்க-னா, இந்தியா இந்த டீமுக்கிட்ட ஆடி இருந்தா எப்படியிருக்கும், அந்த டீமுக்கிட்ட ஆடியிருந்தா எப்படியிருக்கும்-னு ஒரு ஆசை இருந்திருக்கும். அது இந்த வாட்டி நடக்கப் போகுது. ஸோ, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு ரசிகனுக்கு பிடிச்ச வேர்ல்டு கப்பா இருக்கப் போகுது. ஆனா, கேப்டனுக்கு அது ரொம்ப டஃப்பான விஷயம்.

பட், Definite-ah நமக்கு செம Entertainment காத்திருக்கு!.

தொடரும்....

கேப்டன் கோலிக்கு தோனி செய்து கொடுக்க வேண்டிய கடமை என்ன?, ரோஹித் - தவான் சொதப்பல், 4th டவுன் வீரர் யார்?, ரிஷப் பண்ட்டை ஏன் தேர்வு செய்யல?, 4வது ஃபாஸ்ட் பவுலரை ஏன் எடுக்கல?, குல்தீப் யாதவை ஏன் உலகக் கோப்பையில விராட் கோலி தேர்வு பண்ணாரு? இங்கிலாந்து கண்டிஷனுக்கு தங்களை அடாப்ட் செய்து கொள்ளப் போற இந்திய வீரர்கள் யார்? என்ன செய்தால் இந்தியா இந்த உலகக் கோப்பையை ஜெயிக்கலாம்? போன்ற பல விஷயங்களை  நம்மிடம் பகிர்ந்த சடகோபன் ரமேஷின் அலசல் இரண்டாம் பாகத்தில்...

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment