/tamil-ie/media/media_files/uploads/2017/11/z874.jpg)
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுக்கு, பாலிவுட் நடிகை சகாரிகா காட்கே உடன் இன்று காலை திருமணம் நடைபெற்றது. எளிமையான முறையில் பதிவுத்திருமணமாக நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு, வரும் நவம்பர் 27-ம் தேதி மும்பையில் உள்ள தாஜ் பேலஸில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், ஷாருக் நடித்த 'சக் தே இந்தியா' படத்தில் நாயகியாக நடித்த சகாரிகா கட்ஜே-வை இன்று காலை திருமணம் செய்தார். இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தாஜ் மஹால் பேலஸ் & டவரில் வரும் 27-ஆம் தேதி ரிசப்ஷன் நடைபெறுகிறது. இதற்கான பத்திரிகை வெள்ளை நிறத்திலும், தங்கம் மற்றும் கருப்பு நிறங்களில் எழுத்துகளும் அச்சிடப்பட்டுள்ளன.
சக் தே இந்தியா படத்தில் நடித்த மற்றொரு நடிகை வித்யா மால்வேட் தனது இன்ஸ்டாகிராமில் இந்த பத்திரிக்கையை பகிர்ந்துள்ளார். மணப்பெண் சகாரிகா அணியவுள்ள நகைகள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
And she is hitched ❤️????❤️????❤️????❤️ .. @sagarikaghatge @zaheer_khan34 ❤️ #newlyweds
A post shared by VidyaMMalavade (@vidyamalavade) on
ஜாகிர் கான் 14 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். சகாரிகா 7 பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
சக் தே படத்தில் அவர் ஒரு கிரிக்கெட் வீரரை திருமணம் செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதைப் போலவே, நிஜ வாழ்க்கையிலும் அவர் கிரிக்கெட்டரான ஜாகீர் கானை மணந்துள்ளார். இதுகுறித்து சகாரியா கூறுகையில், "அது வெறும் படம். அதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இரண்டிற்கும் முடிச்சு போட வேண்டாம்" என கூறியிருக்கிறார்.
A post shared by VidyaMMalavade (@vidyamalavade) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.