scorecardresearch

கணவரின் செயலால் அதிருப்தியடைந்த சானியா மிர்சா: ட்விட்டரில் சோகம்!

சில நிமிடங்கள் கழித்து, ஆச்சர்யம் கலந்து அதிர்ச்சியுடன் மற்றொரு ட்வீட் ஒன்றை ட்வீட்டியிருந்தார் சானியா மிர்சா

கணவரின் செயலால் அதிருப்தியடைந்த சானியா மிர்சா: ட்விட்டரில் சோகம்!

நேற்று(ஞாயிற்றுக் கிழமை) லாகூரில் நடந்த இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அபாரமாக வெற்றிப் பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்தப் போட்டியைப் பார்க்க, பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கின் மனைவியும், இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும் வந்திருந்தார். மனைவியை ஏமாற்றாத சோயப் மாலிக், இப்போட்டியில் அரைசதம் விளாசினார். மேலும், தொடர் நாயகன் விருதையும் வென்றார். இதனால் அவருக்கு பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

இதையடுத்து, சானியா மிர்சா தனது ட்விட்டரில், ‘நாம் இதில் போகலாமா?’ என்று ட்வீட் செய்திருந்தார்.

சில நிமிடங்கள் கழித்து, ஆச்சர்யம் கலந்து அதிர்ச்சியுடன் மற்றொரு ட்வீட் ஒன்றை ட்வீட்டியிருந்தார்.

அதில் தனது கணவர், சக வீரர் ஷதப் கானுடன் பைக்கில் செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு, “சரி! நான் கவலைப்படவில்லை… அந்த சீட் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது என நினைக்கிறேன்” என்றார்.

தனது கணவர் வென்ற அந்த பைக்கில், அவருடன் செல்ல விரும்பிய சானியா, ஏமாற்றத்துடன் தனது அதிருப்தியை ட்விட்டரில் வெளியிட்டிருப்பது ரசிகர்கள் இடையே அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Sania mirza unhappy after husband shoaib malik takes teammate for bike ride and not her