Advertisment

”அம்மா, எனக்கான உங்களின் உதவியை எப்போதும் தொடர்வீர்கள் என சத்தியம் செய்யுங்கள்”: செரீனா உருக்கமான கடிதம்

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
serena williams, tennis sports, serena williams baby, serena letter to mother,

புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்-க்கு சமீபத்தில் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

Advertisment

தன் குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா என செரீனா வில்லியம்ஸ் பெயர் சூட்டினார். தன் குழந்தையின் முதல் புகைப்படத்தை இன்ஸ்டக்ராமில் பகிர்ந்தது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது, செரீனா வில்லியம்ஸ் தன் அம்மாவுக்காக உருக்கமான கடிதம் ஒன்றை இணையத்தில் எழுதினார். அதன் தமிழாக்கம் இதோ.

”அன்புள்ள அம்மாவுக்கு,

நான் அறிந்த மிகவும் வலிமையான பெண் நீங்கள் ஒருவர் தான். இப்போது, நான் என் மகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். (ஓ மை காட், எனக்கு இப்போது மகள் இருக்கிறாள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது) அவளுக்கு என்னைப் போன்றே கைகளும் கால்களும் இருக்கின்றன! என்னைப் போன்றே உறுதியாகவும், திடமான, உறுதியான கைகளுடனும், உடலுடனும் இருக்கிறாள். என்னுடைய 15 வயதிலிருந்து இன்று வரை நான் அனுபவித்தவற்றையெல்லாம் இவளும் எதிர்கொண்டாள் என்ன செய்வாள் என நான் சிந்தித்து பார்க்கிறேன்.

நான் மிகவும் உறுதியானவளாக இருந்ததற்கு என்னை இந்த உலகம் ஆண் என அழைத்திருக்கிறது. நான் போதைப்பொருள் உபயோகித்திருக்கிறேன் என சொல்லியிருக்கிறது. (இல்லை, வெற்றியை அடைவதற்கு நேர்மையற்றவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை). நான் பெண்கள் பிரிவில் விளையாடக் கூடாது.... ஆடவர் பிரிவில் தான் விளையாட வேண்டும் என கூறுவார்கள். ஏனென்றால், நான் மற்ற பல பெண்களை போல் அல்லாமல் மிகவும் உறுதியாக இருப்பதால் அவ்வாறு சொல்கின்றனர். (இல்லை, நான் கடும் முயற்சி செய்கிறேன். நான் வலிமையான உடலுடன் பிறந்திருக்கிறேன். அதற்காக, நான் பெருமை கொள்கிறேன்.)

ஆனால், அம்மா கறுப்பின பெண்களின் வலிமையை அறியாத நிரூபர்கள், ஆட்கள், அறிவிப்பாளர்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள் என தெரியவில்லை.

சில பெண்கள் எப்படியிருப்பார்கள் என்பதை நாம் உணர்த்தியதற்காக நான் பெருமை கொள்கிறேன். எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் நளினமாகவும், வலிமையாகவும், உயரமாகவும், குட்டையாகவும் இருக்கின்றனர். ஆனால், பெண் என்ற விஷயத்தில் நாம் எல்லோருமே ஒன்றுதான் என்பதில் பெருமை கொள்கிறேன்.

நீங்கள் கம்பீரமானவர், உங்களின் வழியில் செல்லவே நான் விரும்புகிறேன். அதற்காக நான் முயற்சி செய்கிறேன். இன்னும், நீண்ட தொலைவு செல்ல வேண்டும். ஆனால், நன்றி.

எனக்கே நேரிடும் எல்லா கடினங்களையும், சவால்களையும் எதிர்கொள்ள நீங்கள் எனக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததற்கு நன்றி. என்னுடைய குழந்தை அலெக்சிஸ் ஒலிம்பியாவும் உங்களை போன்ற மனோபலத்தைப் பெற நான் கற்றுத்தருவேன்.

எனக்கு நீங்கள் எப்போதும் உதவியாக இருப்பீர்கள் என சத்தியம் செய்யுங்கள் அம்மா. உங்களைப் போல நான் பொறுமையாகவும், வலிமையாகவும் இருப்பேனா என தெரியவில்லை. ஆனால், ஒருநாள் நான் அந்த இடத்தை அடைவேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன் அம்மா

அன்புடன்

உங்கள் 5 பிள்ளைகளில் இளையவள்

செரீனா”

என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Serena Williams
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment