பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர், எப்போதும் இந்தியர்களின் மேல் அன்பும், பாசமும் கொண்டிருக்கிறார் என்றால், கண்ணை மூடிச் சொல்லிவிடலாம் சகித் அப்ரிடி என்று. இந்தியாவை மட்டுமல்ல, ' உலக நாடுகளுக்கு இடையே போர் என்பதே கூடாது. அன்பை பரவச் செய்வதே முக்கியம்' என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் சகித் அப்ரிடி. இன்று அவருக்கு 38வது பிறந்தநாள். இதை முன்னிட்டு, அப்ரிடி படைத்த சில ரெக்கார்ட்ஸ் பற்றி இங்கே பார்ப்போம்.
1. ஒருநாள் போட்டி ஒன்றில் 7 விக்கெட்டும், அரைசதமும் விளாசிய ஒரே சர்வதேச கிரிக்கெட் வீரர் அப்ரிடி தான். 7/12 & 76 . 7 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார் அப்ரிடி.
2. சர்வதேச கிரிக்கெட்டில் 10,000+ ரன்களும், 500+ விக்கெட்டுகளும் எடுத்த இரண்டு வீரர்களில் அப்ரிடியும் ஒருவர்.
3. சர்வதேச கிரிக்கெட்டில் 476 சிக்ஸர்கள் விளாசியுள்ள ஒரே வீரர் அப்ரிடி தான்.
4. பாகிஸ்தான் நாட்டிற்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் அப்ரிடி மட்டுமே. 523 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
5. தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியிலேயே 37 பந்தில் சதம் விளாசி சாதனை புரிந்தவர்.
6. ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை 50 பந்துகளுக்குள் சதம் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் அப்ரிடி தான்.
7. 2007ம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பையின் 'தொடர் நாயகன்' அப்ரிடி தான்.
8. 2009ம் ஆண்டு பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பையை வென்ற போது, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அரை சதம் விளாசி, பாகிஸ்தான் உலகக் கோப்பையை உச்சிமுகர காரணமாக இருந்தவர் அப்ரிடி தான்.