தன்னை தாக்கியதாக ஆபாச நடிகை வலேரி ஃபாக்ஸ் கூறிய குற்றச்சாட்டை, ஆஸ்திரேலிய முன்ளாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். போலீஸாரின் விசாரணையில் இது குறித்து தெளிவான விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
லண்டனில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை இந்த சம்வம் நிகழ்ந்துள்ளது. தன்னை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் தாக்கியதாக ஆபாச நடிகையான வலேரி ஃபாக்ஸ் குற்றம்சாட்டினார். ஆனால், இதில் பல்வேறு சர்ச்சைகள் இருந்ததையடுத்து, ஷேன் வார்ன் கைது செய்யப்படவில்லை. வலேரி ஃபாக்ஸ் தனது ட்விட்டரில், வார்ன் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். பெண் ஒருவரை தாக்குவதை பெருமையாக கருதுகின்றீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விவகாரத்தில், ஷேன் வார்ன் மத்திய லண்டன் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
இதனிடையே, வலேரி ஃபாக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் பொய் கூறவில்லை என்றும், ஒரு பிரபலாம் என்பதால், பெண் ஒருவரை தாக்கிவிட்டு அதிலிருந்து தப்பித்துவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஷேன் வார்ன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். நான் பெண் ஒருவரை தாக்கியதாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தவறானவை. போலீஸாரின் விசாணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறேன். போலீஸார் சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளை கொண்டு விசாரணை செய்தபோது, நான் குற்றமற்றவர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளேன். இதன் மூலம் எனது மீதான குற்றச்சாட்டு போலியானது என்பதும், எனது மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்ல என போலீஸார் உறுதியளித்துள்ளனர். இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது என்றும் ஷேன் வார்ன் குறிப்பிட்டுள்ளார்.