நம்பர்.1க்கும், நம்பர்.2க்கும் சண்ட… அத ஊரே எப்படி வேடிக்கை பார்ப்பது? #INDvsSA முழு அப்டேட்ஸ்

வெளிநாட்டு தொடர்கள் என்றாலே, எந்த நேரத்தில் மேட்ச் தொடங்கும் என்ற குழப்பம் நமக்கு இருக்கும். இங்கு, போட்டி குறித்த முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன

By: Updated: January 4, 2018, 01:41:59 PM

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் நாளை (ஜன.,5) தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தில் இந்தியாவும், இரண்டாம் இடத்தில் தென்னாப்பரிக்காவும் இருப்பதால், இத்தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வெளிநாட்டு தொடர்கள் என்றாலே, எந்த நேரத்தில் மேட்ச் தொடங்கும் என்ற குழப்பம் நமக்கு இருக்கும். இங்கு, போட்டி குறித்த முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டி நடப்பது எங்கே? ஹிஸ்டரி ப்ளீஸ்…!

இந்தியா vs தென்னாப்பரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில், கடைசியாக 2011ம் ஆண்டு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அப்போட்டி டிராவானது.

முதல் டெஸ்ட் போட்டி எத்தனை மணிக்கு தொடங்குகிறது?

இப்போட்டி IST படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. அதாவது, நாம் மதியம் 2 மணி முதல் இப்போட்டியை பார்க்கலாம். இதற்கான பிராட்கேஸ்டிங் மதியம் 1 மணிக்கே தொடங்கிவிடும். டாஸ் டைமிங் மதியம் 01:30.

முதல் டெஸ்ட் போட்டியை எந்த சேனலில் பார்க்கலாம்?

சோனி டென் 1 ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி டென் 1 ஸ்போர்ட்ஸ் ஹெச்டி-யில் ஆங்கில வர்ணனையுடன் மேட்ச் பார்க்கலாம். ஹிந்தி கமெண்ட்ரிக்கு சோனி டென் 3ல் பார்க்கலாம்.

இன்டர்நெட்டில் எப்படி பார்ப்பது?

இப்போட்டியை ஆன்லைனில் SonyLiv.comல் காணலாம். ஐஇதமிழ்.காமில் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்களை பெறலாம்.

India squad: Virat Kohli (captain), Ravichandran Ashwin, Jasprit Bumrah, Shikhar Dhawan, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Hardik Pandya, Parthiv Patel, Cheteshwar Pujara, Ajinkya Rahane, Lokesh Rahul, Wriddhiman Saha, Mohammed Shami, Ishant Sharma, Rohit Sharma, Murali Vijay, Umesh Yadav

South Africa squad: Faf du Plessis (captain), Hashim Amla, Temba Bavuma, Quinton de Kock, Theunis de Bruyn, AB de Villiers, Dean Elgar, Keshav Maharaj, Aiden Markram, Morne Morkel, Chris Morris, Andile Phehlukwayo, Vernon Philander, Kagiso Rabada, Dale Steyn

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:South africa vs india 1st test live cricket streaming and live score online how to get sa vs ind test tv coverage

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X