New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/08/z138.jpg)
பாகிஸ்தானில் லாகூர் நகரில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடும் உலக லெவன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் லாகூர் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறவுள்ள, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடும் உலக லெவன் அணியின் வீரர்கள் அடங்கிய பட்டியல், இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிற்கு எதிராக 3 டி20 போட்டிகளில் ஆடும் உலக லெவன் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்காவின் டு பிளசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஹாசிம் ஆம்லா, டேவிட் மில்லர், மோர்னே மார்கல், சாம்யூல் பத்ரீ, ஜார்ஜ் பெய்லி, கிராண்ட் இலியாட், தமீம் இக்பால், டிம் பெய்ன், திசாரா பெரேரா, டேரன் சமி, இம்ரான் தாஹிர், பால் காலிங்வுட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
South Africa's @faf1307 will lead a World XI in a 3 match T20 series against Pakistan in Lahore next month. pic.twitter.com/yMwBQNhbOL
— ICC (@ICC) 24 August 2017
இந்த உலக லெவன் அணியில் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்திய அணியில் இருந்து ஒருவர் கூட இத்தொடரில் இடம்பெறவில்லை. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுவதால், அணியில் இந்திய வீரர்கள் சேர்க்கப்படவில்லை என ஐசிசி தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.