முடிவுக்கு வந்த ரூட்டின் 'நாட் அவுட்' ! ஆம்லாவின் 'வாவ்' ரெக்கார்ட்! சுவாரஸ்ய புள்ளி விவரம்!

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், இப்போட்டியைத் தவிர்த்து, கடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் நாட் அவுட்டாக திகழ்ந்து, 200 ரன்களை கடந்தார்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த இரு போட்டிகளிலும் இங்கிலாந்து வென்றுள்ளதால், இப்போட்டியையும் வென்று தொடரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.

மேலும், இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா 3rd ODI Live ScoreCard உடனே பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

* இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், இப்போட்டியைத் தவிர்த்து, கடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் நாட் அவுட்டாக திகழ்ந்து, 200 ரன்களை கடந்தார். 46*, 91*, 46* என்று நாட் அவுட் வீரராக இருந்தார். ஆனால், இன்று நடந்து வரும் மூன்றாவது போட்டியில், 27 ரன்கள் எடுத்திருந்த போது ஹேசில்வுட் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதன்மூலம், அவரது நாட் அவுட் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

* ஆஸ்திரேலியா – இங்கிலாந்து நாடுகள் இடையேயான ஒருநாள் போட்டியில், இதுவரை அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியல் இதோ,

1600* இயன் மோர்கன் @43.24
1598 ரிக்கி பாண்டிங் @48.42
1430 மைக்கேல் கிளார்க் @43.33
1395 கிரஹம் கூச் @46.50
1306 ஷேன் வாட்சன் @36.27

* முதல் 100 ஒருநாள் போட்டியிலேயே 4000 ரன்களை கடந்த வீரர்களின் விவரம்,

4808 அம்லா
4217 டேவிட் வார்னர்
4177 கிரீனிட்ஜ்
4150* ஜோ ரூட்
4146 ரிச்சர்ட்ஸ்
4107 விராட் கோலி.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close