"சச்சினின் பேட்டி என் வாழ்க்கையிலேயே மறக்கமுடியாதது" - நெகிழும் கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து!
Pradeep Muthu star sports tamil commentator latest interview in tamil: கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து, தான் சச்சின் டெண்டுல்கரை பேட்டி எடுத்தது தன்னுடைய வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத ஒரு அனுபவமாக இருந்தது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்களித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
pradeep muthu Tamil News: விளையாட்டு உலகில் வர்ணனையாளர்களுக்கு (கமன்டேட்டர்கள்) என முக்கிய இடம் உண்டு. ஒரு போட்டி அல்லது ஒரு தொடரை தொலைக்காட்சிகளில் கண்டுகளிக்கும் ரசிகர்களை அவர்கள் உற்சாகப்படுவதோடு அந்த விளையாட்டில் உள்ள நுணுக்கங்களையும், அறிவையும் ரசிகர்களுக்கு கடத்துகிறார்கள். இதனாலேயே குறிப்பிட்ட வர்ணனையாளர்களின் வர்ணனையை ரசிக்க ஒரு பெருங்கூட்டம் டிவி முன் அமர்கிறது.
Advertisment
அந்த வகைகள் தனது துல்லியமான தரவுகளாலும், நேர்த்தியான மொழி நடையாலும் தமிழ் கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக வலம் வருகிறார் "ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் சொத்து" முத்து பிரதீப்.
லயோலா கல்லூரியில் வர்த்தகவியலில் இளங்கலை பட்டம் பெற்ற இவர் முன்னணி முதலீட்டு நிறுவங்களின் வங்கிகளில் பணியாற்றினார். பணிச்சுமையும் வேலைப்பளுவும் தன்னை ஆக்கிரமைக்கவே வேறு துறையில் பயணிக்க விரும்பினார். இதனையடுத்து ஏசியன் கலேஜ் ஆஃப் ஜெர்னலிஸம் (Asian College of Journalism) கல்லூரியில் தனது முதுகலை பட்டத்தைப் பெற்றார்.
படித்தவுடனே வேலை என்பது எட்ட கனியாக இருந்த நிலையில், தனியார் ரேடியோவில் வீஜே-வாக பணியமர்ந்தார். அதோடு நின்று விடாமல், யூடூப் சேனல்களிலும், தனியார் தொலைக்காட்சிகளிலும் வீஜே எனும் குறுகிய வட்டத்தில் சுற்றினார். இந்த சமயத்தில் தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல தமிழில் விளையாட்டுகளை வர்ணனை செய்ய ஆட்கள் தேவை என்ற அழைப்பு கிடைத்தது.
வாசல் தேடி வந்த வாய்ப்பு தவறவிடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்ட முத்து கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தற்போது அந்த சேனலின் முன்னணி வர்ணனையாளர்களுள் ஒருவராகவும் ரூபம் எடுத்துள்ளார்.
உள்ளூர் போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை வர்ணனை செய்து வரும் முத்து பிரதீப், தொலைக்காட்சி வர்ணனையாளரின் பணி குறித்து நம்மிடம் பேசுகையில் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்), "ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் நாங்கள் தனித்தனியாக தயார் செய்வோம். கமன்டேட்டர்களுக்கு போட்டிக்கு முன்னரே புள்ளி விவரங்களை வழங்குவார்கள். அதில் ஒரு அணியின் பலம், பலவீனம், ஒரு வீரர் எந்த ஏரியால ஸ்ட்ராங் என எல்லா விவரங்களையும் கொடுத்திருப்பார்கள். அதை நாங்கள் நன்கு தாயார் செய்து கொண்டு போட்டி துவங்க 1 அல்லது 2 மணிநேரம் இருக்க மைக்கை பிடித்து விடுவோம்." என்கிறார்.
வர்ணனை செய்வதில் உங்களை மிகவும் கவர்ந்தவர் யார்? என நாம் வினவியபோது, "கமன்டேட்டர்களில் எனக்கு ஹர்ஷா போக்லே மற்றும் இயன் பிஷப் மிகவும் பிடித்தவர்கள். ஹர்ஷா போக்லே எனக்கு பிடிக்க காரணம், அவர் மிகவும் கவித்தைத்துவமாக பேசுவார். தவிர அவருடன் உள்ள கமன்டேட்டர்கள் அனைவருமே முன்னாள் வீரர்கள், நிறைய கிரிக்கெட் அனுபவம் கொண்டவர்கள். இருப்பினும், அவர்களுக்கு இணையாக பேசி அசத்துவார். அதோடு உவமைத்துவமாக பேசுபவராகவும் அவர் இருக்கிறார்.
நல்ல நியாபக சக்தி கொண்டவர் அவர், உதாரணமாக தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு முறை விக்கெட் எடுத்த போதெல்லாம், சென்னைக்கு 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் 'இந்த இளம் வீரர்' என்று நடராஜனின் ஊரின் பெயரை அவ்வளவு அழகாகக் கூறி உலகறிச் செய்தவர்.
இயன் பிஷப் மிகவும் ஆக்கப்பூர்வமாக பேசக்கூடியவர். அவரை ஒருமுறை சந்தித்த போது 'கமன்ட்ரியில் நீங்கள் தான் தோனி' என்று கூறினேன். அவரோ 'இல்லை, இல்லை தோனி என்னைவிட மிகப்பெரியவர்' என பதிலளித்தார்." என்றார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்காக நிறைய கிரிக்கெட்டர்களை பேட்டி கண்டுள்ள முத்து அதில் மறக்கமுடியாத இரண்டு நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரை நான் பேட்டி எடுத்தது என் வாழ்க்கையிலேய மறக்கமுடியாத ஒரு அனுபவமாக இருந்தது. மிகப்பெரிய ஜாம்பவான் கிரிக்கெட்டர் அவர். ஆனால் நான் பேட்டி கண்டபோது கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை. இதனால்தான் அவரை கிரிக்கெட்டின் கடவுள் என அவரது ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள்.
நான் அவரைத்தான் பேட்டி காண உள்ளேன் என அங்கே சென்று சேரும் வரை எனக்கு தெரியாது. சச்சின் தான் எனத் தெரிந்ததும் எல்லோரும் உணவர்வதுபோல் எனக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆனால், அவர் மிகவும் கேஸுவலாக இருந்தார்.
இந்த பேட்டியின் போது எங்களிடம் இரண்டு கேமராதான் இருந்தது. எனவே அதை இருவருக்கும் பயன்படுத்திக்கொண்டோம். பேட்டி முடிந்த பின்னர் நான் கேள்வி கேட்பதை மட்டும் இன்னொரு முறை தனியா எடுக்க ப்ளான் செய்தோம். ஆனால், நாங்கள் இருந்த ஹோட்டலுக்கு வெளியே அவரது ரசிகர்கள் அதிகபேர் கூடியிருந்தார்கள். அதனால் அந்த ரூம்லேயே இருந்து ஷூட்டிங் முடிக்க முயற்சித்தோம்.
இப்போ சச்சின் உட்கார்ந்த இடத்துல ஒரு லைட் பாயை உட்கார வைத்து, "சொல்லுங்க சச்சின், எப்படி சச்சின்"னு பேசிட்டிருந்தோம். உடனே, அவர் பக்கத்துல வந்து, "சச்சின் இப்பிடி உட்கார மாட்டார். நல்லா நிமிர்ந்து உட்காரணும், உட்காரு"னு அந்த லைட் பாயை தட்டிக்கொடுத்து உட்கார வைத்துவிட்டுப் போனார். ரொம்பவே கூலா அதை சொல்லி எங்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதேபோல், ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் போன்றவர்களுடன் கண்ட பேட்டிகளும் என்னால் மறக்கமுடியாதது. பேட்டியாக இல்லாமல் க்ஸுவலா பேசியதில் மறக்கமுடியாதது என்றால், ஜாம்பவான் வீரர் கபில்தேவுடன் பேசியது தான். அவரை நாங்கள் 'கபில் பாஜி' என்று தான் அழைப்போம். பாஜின்னா பஞ்சாபியில் அண்ணானு அர்த்தம்.
நான் பாஜியோட ஒரு சார் சேர்த்து, பாஜிசார்னு அழைப்பதுண்டு. ஒருநாள் "பாஜிசார் ஒரு செல்ஃபி ப்ளீஸ்"ன்னு கேட்டேன். "எதுக்கு"னு அவர் கேட்டார். "கபில்தேவோட போட்டோ எடுத்திருக்கேன்னு என் பேரன், பேத்தி வரைக்கும் சொல்வேன்ல"னு என்றேன். "அப்படியா, சரி நார்மலா செல்ஃபி எடுக்குறதுல என்ன விசேஷம் இருக்கு. என் மடியில உட்கார்ந்து எடு"னு சொல்லி, மடியில் உட்கார வைத்து எடுத்து என் வாழ்க்கையில மறக்க முடியாத தருணமாக மாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.