சுட்டுக் கொல்லப்பட்டதாக போலி செய்தி… வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்த மல்யுத்த வீராங்கனை!

World medallist Nisha Dahiya dispels rumours about death Tamil News: மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் அடையாளம் தெரியாத கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், அது போலியான செய்து என்றும், தான் உயிரோடு இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Sports news in tamil: World medallist Nisha Dahiya dispels rumours about death

Sports news in tamil: இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியா ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் உடனான தனது ஸ்பாரிங் செஷனை முடித்த சில நிமிடங்களில், தனது போனை ஆன் செய்திருக்கிறார். அதில் மெசேஜ்கள் மற்றும் தவறவிட்ட அழைப்புகளால் நிரம்பி இருந்திருக்கின்றன. நிஷா தஹியாவின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு அவருக்கு கண்ணீர் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்ததும் அந்த மெசேஜில் இருந்துள்ளன. சிறிது நேரத்திற்குப் பிறகுதான், தனக்கு வந்த செய்திகள் தவறான அடையாளத்தின் காரணத்தால் வந்தவை என்பதை நிஷா உணர்ந்திருக்கிறார்.

உண்மையில், ஹரியானா மாநிலம் சோனேபத்தில் உள்ள ஒரு அகாராவில் நிஷா என்ற மல்யுத்த வீராங்கனை சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. சில நிமிடங்களில் இந்த செய்தி வைரலாக பரவியது. இதில் சமீபத்தில் முடிவடைந்த U-23 உலக சாம்பியன்ஷிப்பில் நிஷா தஹியா தனது வெண்கலப் பதக்கத்துடன் இருக்கும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டு அந்த செய்தி பரவத் தொடங்கியது. இதனால் சில முக்கிய நபர்கள் நிஷா தஹியாவின் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அது போலியான செய்து என்றும், தான் உயிரோடு இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் நிஷா தஹியா. அந்த வீடியோவில், “நான் நலமாக இருக்கிறேன். தற்போது தேசிய சீனியர் போட்டியில் விளையாடுவதற்காக கோண்டா (GONDA) நகருக்கு வந்துள்ளேன். நான் கொல்லப்பட்டதாக வரும் செய்தி போலியானது” என்று நிஷா தஹியா தெரிவித்துள்ளார். இதனை இந்தியா மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

‘நிஷா தஹியா’ உயிருடன் இருக்கிறார் என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ட்வீட் செய்துள்ளார். மேலும் நிஷா தஹியாவுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். நிஷா தஹியா வெளியிட்டுள்ள வீடியோவில் சாக்ஷி மாலிக்கும் உடன் இருக்கிறார்.

நிஷா தஹியா, கடந்த வெள்ளி அன்று செர்பியாவின் பெல்கிரேடில் நடந்த 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 72 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். அவருக்கு நேற்று புதன்கிழமை காலை, பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் மூலம் பாராட்டு தெரிவித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sports news in tamil world medallist nisha dahiya dispels rumours about death

Next Story
ஐபிஎல்-2017: அதிரடி காட்டிய ரெய்னா… குஜராத் அணிக்கு 2-வது வெற்றி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com