Advertisment

நெதர்லாந்துடன் மோத 'தூக்கம்'தான் பயிற்சி: அலட்சியத்தில் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி நாளை சிட்னியில் நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

author-image
WebDesk
New Update
India vs Netherlands, Team India cancels Practice SESSION Tamil News

Indian team cancels Practice SESSION before Netherlands match, team hotel 42 KM from SCG Tamil News

T20 World Cup 2022 - India vs Netherlands Tamil News: 8-வது டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில், கிரிக்கெட்டில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை கடந்த ஞாயிற்று கிழமை மெல்போர்னில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Advertisment

இந்தியா vs நெதர்லாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு, இந்திய அணி நாளை சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது நாளை மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்காக, வீரர்கள் அனைவரும் முன்கூட்டியே மெல்பேர்னில் இருந்து சிட்னிக்கு சென்றுள்ள நிலையில், அவர்கள் அங்கு பயிற்சியே செய்யவில்லை என்றும், காரணம் சிட்னியில் ஏற்பாடு சரியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்திய வீரர்களுக்கு வழங்கிய உணவு சரியில்லை' - பிசிசிஐ புகார்

publive-image

இந்நிலையில், சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என்று பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு சாண்ட்விச் மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், சிட்னியில் நடந்த பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு ஆறிபோனதாகவும், நல்ல உணவாக இல்லை என்றும் இந்திய அணி வீரர்கள் ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

காரணம் என்ன?

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க பயிற்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மைதானத்தில் இருந்து இந்திய அணி தங்கியுள்ள ஹோட்டல் சுமார் 42 கிமீ தொலைவில் உள்ளது. தீவிர பயிற்சி செய்து சோர்வில் உள்ள வீரர்கள் காலை, மாலை என இரு வேளையும் சுமார் 1 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் இன்று பயிற்சிகள் முழுவதுமாக ரத்து செய்துவிட்டு வீரர்கள் நன்கு ஓய்வெடுத்து வருகின்றனர்.

publive-image

அலட்சியத்தில் இந்திய அணி

நேற்று நடைபெற்ற பயிற்சியில் இந்திய அணியின் பேட்டிஸ்மேன்கள் மட்டுமே பயிற்சி மேற்கொண்டனர். பவுலர்கள் அனைவரும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியே இல்லாமல் நெதர்லாந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகும். நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரை, முதல் சுற்றுப்போட்டிகளில் அந்த அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும், அவர்களின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் வரிசை இந்திய அணிக்கு நிச்சயம் சவால் கொடுக்கும் விதமாகவும் உள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

India Sports Cricket Indian Cricket Team T20 Indian Cricket Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment