கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ விதித்த ஆயுட்கால தடை உத்தரவு தொடரும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அணியிக் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின்போது இவர் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. ராஜஸ்தான் அணியில் இருந்த போது சூதாட்டப்புகாரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதிப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அறிவித்தது.
இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்திற்கு எதிராக குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என கூறி அவரை விடுதலை செய்தது. எனினும், பிசிசிஐ ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
பிசிசிஐ-யின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீசார் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணை செய்த நீதிபதி முகமது முஸ்டாக், ஸ்ரீசாந்த் மீதான பிசிசிஐ-பின் தடையை நீக்கி கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.
இதன் காரணமாக 34-வயதான ஸ்ரீதான் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பிசிசிஐ-யின் தரப்பில், கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பென்ஞ்-ல் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி நவ்நிதி பிரசாந்த் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது.
இந்த விசாரணையின் முடிவில், பிசிசிஐ விதித்த ஆயுட்கால தடை தொடரும் என உத்தரவிட்டது. இதனால், அவர் பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீசாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கேரள உயர் நீதிமன்றத்தில் முடிவு என்பது மோசமானது.எனக்கு மட்டும் தனி சட்டமா? உண்மையான குற்றவாளிகளை தண்டிப்பது யார்? சூதாட்டத்தில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எந்த வகையில் தடை நீங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தை நாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.