இலங்கைக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே விளையாடி வந்தது. இதில், இன்று நடந்த இறுதிப் போட்டியில், இலங்கையை 3 மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதுவும் இலங்கைக்கு எதிராக இலங்கை மண்ணில். இலங்கை நிர்ணயித்த 203 ரன்கள் இலக்கை, 38.1-வது ஓவரில் எட்டி அசத்தியுள்ளது ஜிம்பாப்வே. 2009 ஆண்டிற்கு பிறகு அந்நிய மண்ணில் ஜிம்பாப்வே வெல்லும் முதல் தொடர் இதுவாகும்.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள ஜிம்பாப்வே கேப்டன் க்ரேம் க்ரீமர், "நான் எப்போதும் டாஸ் போடும் போது ஹெட்ஸ் தான் கேட்பேன். இம்முறை மாற்றி கேட்டேன். அது ஒர்க்அவுட் ஆகிவிட்டது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது. எங்கள் நாட்டின் ரசிகர்கள் நிச்சயம் அவர்களது வீட்டில் துள்ளி குதித்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் சிறப்பாக விளையாடுகிறோம் என்று எங்களுக்கு தெரியும்" என்றார்.
இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் பேசிய போது, "நாங்கள் அனைத்து துறையிலும் தோற்றுவிட்டோம். ஜிம்பாப்வே எங்களுக்கு உண்மையில் மிகவும் சவால் அளித்துவிட்டது. எங்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை" என்றார்.