Advertisment

ஸ்டார் பிளேயர்ஸ் இல்லை; ஆனாலும்… இலங்கை வியூகம் இதுதான்!

India vs Sri Lanka, Asia Cup 2022, 9th Match, Super Four: Match Preview, predicted 11 Tamil News: பொதுவாக இலங்கை அணி தரமான மற்றும் நீண்ட பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் நட்சத்திர வீரர்கள் இல்லை என்றாலும், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும் வீரர்கள் உள்ளனர்.

author-image
Martin Jeyaraj
New Update
Sri Lanka's strategy against india on going Asia cup super 4 match

Asia Cup 2022 - Sri Lanka cricket team Tamil News

India vs Sri Lanka, Super Four - Asia Cup 2022 Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், தற்போது சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Advertisment

இலங்கையின் வியூகம் என்ன?

இலங்கை அணியைப் பொறுத்தவரை, லீக் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டது. அதன்பிறகு வங்க தேச அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. இந்த சுற்றின் முதல் ஆட்டத்தில் மீண்டும் ஒருமுறை ஆப்கான் அணியை சந்தித்த இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்தது.

பொதுவாக இலங்கை அணி தரமான மற்றும் நீண்ட பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் நட்சத்திர வீரர்கள் இல்லை என்றாலும், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும் வீரர்கள் உள்ளனர். அந்த அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் குசல் மெண்டிஸ், கடந்த இரண்டு ஆட்டங்களில், 60 பந்துகளில் 96 ரன்களை எடுத்தவராக இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கை அணியின் தொடக்க வீரராகவும் அவர் களமாடி வருகிறார்.

மெண்டிஸ் தனது 779 ரன்களில் 545 ரன்கள் அவர் தொடக்க வீரராக இறங்கி விளையாடியபோது சேர்த்தவையாகும். அவரது ஒட்டுமொத்த ஸ்டிரைக் ரேட் 125 ஆக இருந்தாலும் அவர் 145 ஸ்டிரைக் ரேட்டில் பந்துகளை விரட்டி அடிக்கிறார். மேலும், அவர் ஆசியக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இலங்கையின் சிறந்த பேட்ஸ்மேனாகவும், இலங்கையின் சமீபத்திய உள்நாட்டு டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் வலம் வருகிறார்.

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணியில் இதுவரை பங்களித்த பாதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க மற்றும் பானுக ராஜபக்ஷ போன்றவர்களைக் கடந்தவராக கேப்டன் தசுன் ஷனக இருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் ஃ புள் டாஸ் பந்தில் அவுட் ஆன போதிலும், அவர் ஒரு சிறந்த வீரராகவே உள்ளார். டி-20 தொடர்களில் 142 ஸ்ட்ரைக் ரேட்டில் 363 ரன்களை எடுத்துள்ளார்.

சுழல் தாக்குதல்

சுழல் தாக்குததலால் பல பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்த பல ஜாம்பவான் வீரர்களை உருவாக்கிய அணி இலங்கை. ஆனால், தற்போது விரல் விட்டு எண்ணி விடும் அளவிலான சுழற் பந்துவீச்சாளர்களே உள்ளார்கள். அதில், வனிந்து ஹசரங்க இலங்கையின் சிறந்த வீரராக சர்வதேச அரங்கில் தற்போது ஜொலித்து வருகிறார். ஆனால், அவர் ஆசிய கோப்பையில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக இல்லை. அவர் தனது 11 ஓவர்களில் 7.45 என சிக்கினமாக பந்துவீசியுள்ளர்.

ஆனால், அவரைக்காட்டிலும், மஹீஷ் தீக்ஷனா இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். பவர்பிளேயின் போது அடிக்கடி வந்து பந்துகளை வீசி குடைச்சல் கொடுத்து வருகிறார். இதுவரை அவரது 12 ஓவர்கள் முழுவதும் 7.25 ரன்களே விட்டுக்கொடுத்துள்ளார்.

கேப்டன் ஷனக இந்த தொடரில் தனது துணை சுழல் விருப்பங்களை (சரித் அசலங்க மற்றும் குணதிலக்க) பயன்படுத்தவில்லை. ஏனெனில் ஹசரங்கவும் தீக்ஷனாவும் ஒப்பீட்டளவில் அதிக ஸ்கோரைப் பெற்ற ஆட்டங்களில் கூட சிறப்பாகப் போராடி பந்துவீசினர். அனுபவமற்ற வேகப்பந்துவீச்சாளர்களால் இலங்கைக்கு சிக்கல்கள் உள்ளன. ஆனால், இலங்கை அணியினர் சுழற்பந்து வீச்சாளர்களை பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.

சேசிங்

செப்டம்பர் 2021 முதல், இலங்கை இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி முதலில் பேட்டிங் செய்த 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதே காலகட்டத்தில், சேசிங் செய்யும் போது அந்த அணி 7ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளனர். இது ஒரு பெரிய முரண்பாடாக தெரிந்தாலும், இதற்கு எந்த தீவிரமான காரணமும் இல்லை.

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இதுவரை, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்த இரண்டு போட்டிகளில், இலங்கை அணி 184 மற்றும் 176 ரன்களை வெற்றிகரமாகத் துரத்தியது. மேலும் ஷார்ஜா மைதானத்தில் சாதனையும் படைத்தது.

குறிப்பாக பனி மூட்டத்துடன் உள்ள துபாயில், ஷனகா டாஸ் வென்றால், முதலில் பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கலாம். ஏன்னென்றால், இங்கு 2-வது பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றியை ருசித்துள்ளது.

இலங்கை அணி வீரர்கள் பட்டியல்:

பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்கா, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, தினேஷ் சண்டிமால், தினேஷ் சண்டிமால், எஸ். ஜெப்ரி வான்டர்சே, அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், நுவன் துஷார, மதீஷ பத்திரன

இலங்கை அணி சார்பில் களமாடும் உத்தேச வீரர்கள் பட்டியல்:

பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, குணதிலகா, தசுன் ஷனகா (கேப்டன்), பானுகா ராஜபக்சே, ஹசரங்கா, சமிரா கருணாரத்னே, தீக்‌ஷனா, அசிதா பெர்னாண்டோ, மதுஷனகா.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket India Vs Srilanka Srilanka Vs India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment