ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்; ஸ்ரீகாந்த் சாம்பியன்

இன்று நடந்த ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் ஸ்ரீகாந்த் சீனாவின் சென் லாங்கை எதிர்கொண்டார். இதுவரை இவ்விருவரும் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அனைத்திலும், சென் லாங் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், இன்று நடந்த இறுதிப் போட்டியில் 22-20, 21-16 என்ற செட் கணக்கில் முதன்முறையாக லாங்கை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியுள்ளார் ஸ்ரீகாந்த். சமீபத்தில் இந்தோனேசிய ஓபன் தொடரை வென்றதை அடுத்து, ஆஸ்திரேலிய ஓபன் தொடரையும் ஸ்ரீகாந்த் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close