இச்செய்தியை படிக்கும் போது நீங்க சற்று சோகமாக கூட இருக்கலாம். மும்பையில் இன்று நடந்துவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, தினேஷ் கார்த்திக் அவுட்டான பின் 'தல' தோனி களமிறங்குகையில், மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று தோனியை களத்திற்கு வரவேற்றனர்.
தோனி கிரவுண்டுக்குள் நுழைந்த போது, ரசிகர்கள் எழுப்பிய கரகோஷமும், விசிலும் அரங்கையே அதிர வைத்தது. ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று அவரை வரவேற்றதால், நியூசி., வீரர்களே ஒருகணம் ஆச்சர்யப்பட்டனர். அந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது.
ஆனால், அந்த சோகமான விஷயம் என்னவெனில், 24 ரன்னில் தோனி அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.