மூட்டைப் பூச்சியை கொல்லும் நவீன மெஷின் – ஸ்டீவ் ஸ்மித்தின் நவீன டெக்னிக் (வீடியோ)

கொரோனா கொடுமை காரணமாக கோக்குமாக்கு தெரியாமல் வீட்டில் தேமே என இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, ‘அட இது நல்லா இருக்கே’ என்று மூளையில் பல்ப் எரிய வைத்திருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஸ்டீவன் ஸ்மித். லாக் டவுன் காரணமாக, வீட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் தருணம் மகிழ்ச்சியானது தான்.…

By: Updated: April 22, 2020, 09:04:26 PM

கொரோனா கொடுமை காரணமாக கோக்குமாக்கு தெரியாமல் வீட்டில் தேமே என இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, ‘அட இது நல்லா இருக்கே’ என்று மூளையில் பல்ப் எரிய வைத்திருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஸ்டீவன் ஸ்மித்.

லாக் டவுன் காரணமாக, வீட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் தருணம் மகிழ்ச்சியானது தான். அரிதானது தான். ஆனால், எவ்வளவு நாள் தான் மீண்டும் மீண்டும் ‘ல ல லா..,, ல ல லா வே படுவது?.

‘வாசிம் அக்ரம் என்னிடம் அப்படி கேட்டிருந்தால் கொன்றிருப்பேன்’ – சோயப் அக்தர்

ஒர்க் ஃப்ரம் ஹோம் போக மொபைல் பார்ப்பது, டிவி பார்ப்பது, படம் பார்ப்பது என்று எத்தனை நாளைக்கு அதையே திரும்ப திரும்ப செய்வது?

உடற்பயிற்சி செய்யச் சொல்லி மருத்துவர்கள் அட்வைஸ் மழை பொழிய, அட போங்கப்பா மோடில் தான் அனைவரும் வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி வருகின்றனர்.

பொறுத்தது போகும்; பொங்கியெழு என்பது போல் ஸ்டீவ் ஸ்மித் இந்த கொடுமைகளில் இருந்து விலக ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

Just a little bit of #isobatting to keep up the hand-eye coordination #cricketdrill #stayhome #stayactive

A post shared by Steve Smith (@steve_smith49) on


அதாவது, உங்கள் வீட்டுச் சுவரை பவுலராக மாற்றி கிரிக்கெட் விளையாடுவதே இந்த அரிய திட்டம். (மூட்டைப் பூச்சியை கொல்லும் நவீன மெஷின் டெக்னிக் தான்; இருந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க).

இந்த வீடியோவை பதிவிட்டு, ‘கை – கண்கள் ஒருங்கிணைப்புக்கான சிறிய பயிற்சி’ என்ற கேப்ஷனிட்டுள்ளார்.

இவ்வளவு நாளா இந்த ஐடியா இல்லாம போயிட்டோமே கணேசா!!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Steve smith works on his hand eye coordination during corona virus lockdown

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X