scorecardresearch

மேக்ஸ்வெல்லை அவுட் செய்ய தோனி அனுப்பிய மெசேஜ் இது தான்! ரிசல்ட்… மெர்சல்!

மேக்ஸ்வெல்லை ஸ்டெம்பிங் செய்வதற்கு முன்பு, தோனி சாஹலுக்கு கொடுத்த அட்வைஸ் மைக்கில் தெளிவாக ரிக்கார்ட் ஆகியுள்ளது

மேக்ஸ்வெல்லை அவுட் செய்ய தோனி அனுப்பிய மெசேஜ் இது தான்! ரிசல்ட்… மெர்சல்!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 92 ரன்கள் எடுத்து எட்டு ரன்களில் தனது சதத்தை மிஸ் செய்தார். சச்சினுக்குப் பிறகு கோலி சதமடிப்பதை ரசிகர்கள் அதிகம் விரும்புவதை சமீபகாலமாக நாம் உணர முடிகிறது.

இது ஒருபுறமிருக்க இந்திய அணியில் தோனி உட்பட மற்ற வீரர்கள் அதிகம் ரன்கள் குவிக்காததால் இந்தியா வெறும் 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆஸ்திரேலிய இனி எளிதில் வெற்றிப் பெற முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஆஸி., கேப்டன் ஸ்மித்தும், அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லும் ஒரு ஸ்டிராங்கான பார்ட்னர்ஷிப்பை அடித்தளமிட்டுக் கொண்டிருந்தனர். முதல் ஒருநாள் போட்டியில், குல்தீப் யாதவ் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட மேக்ஸ்வெல், நேற்றும் குல்தீப் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை அடித்து, கேப்டன் கோலியை பீதிக்கு உள்ளாக்கினார்.

விராட் கோலியும், எப்படியாவது இப்போட்டியில் வென்றுவிட வேண்டும் என அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டே இருந்தார். பும்ரா சிக்ஸர் கொடுத்ததற்கெல்லாம் அதிகம் டென்ஷன் ஆனார் கோலி. இந்த நேரத்தில் மேக்ஸ்வெல் அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடிக்க, 23-வது ஓவரை வீச வந்தார் யுவேந்திர சாஹல்.

அந்த ஓவரில் அவர் வீசிய ஒவ்வொரு பந்திற்கும் தோனி, ஸ்டெம்ப்பிற்கு பின்னாடி நின்றுக் கொண்டு ஆலோசனை வழங்கினார். தோனியின் ஆலோசனைப் படி, முதல் ஐந்து பந்துகளையும் டாட் பால் ஆக்கினார் சாஹல். தோனி ஹிந்தியில் சொன்ன அந்த ஆலோசனைகள் மைக்கில் தெளிவாக பதிவாகி உள்ளது. அதில், “Ye wala accha hai, aise hi daal” என்று தோனி பேசியுள்ளார். அதாவது, “இந்த பந்தின் லைன் மிகவும் சரியாக உள்ளது. இதே லைன் அன்ட் லெந்த்தில் தொடர்ந்து பவுல் செய்” என்று கூறியுள்ளார்.

ஐந்து பால் டாட் ஆனதால் சற்று கோபத்துடன் இருந்த மேக்ஸ்வெல் நிச்சயம் இறங்கி வந்து கடைசி பந்தினை ஆடுவார் என எதிர்பார்த்த தோனி, பந்தை லெக் சைடில் வைடாக வீசும்படி ஆக்ஷன் காட்ட, அதன்படி சாஹல் வைட் பால் வீச, தோனி எதிர்பார்த்தது போன்றே மேக்ஸ்வெல் இறங்கி வந்து கபடி ஆட…… இதற்கு பின் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டுமா?

கிரீஸை விட்டு ஒரு இன்ச் விலகினாலே நம்மாளு, காலி பண்ணிடுவாரு. இதுல இறங்கி வேற விளையாடுனா!? இதுதான் சரியான வாய்ப்பு என்று நினைத்த தோனி, மிகவும் மெதுவாக வந்த பந்தை பிடித்து, டைவ் அடித்து, மின்னல் வேகத்தில் மிடில் ஸ்டெம்பை பிடுங்கி மேக்ஸ்வெல்லுக்கு பை…பை… சொல்லி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்னரே கேப்டன் கோலி நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

தோனியின் அசத்தலான அந்த ஸ்டெம்பிங் வீடியோ இதோ.

https://youtube.com/watch?v=jkE_f7rvYog

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Stumping of the year ms dhoni fools glenn maxwell removes bails in flash watch video

Best of Express