/tamil-ie/media/media_files/uploads/2017/05/a175.jpg)
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடிவரும் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிக்கு இதுதான் கடைசி வருடமாகும். இத்தோடு அவர்களுடைய அணி கலைக்கப்படுகிறது. ஏனெனில், இரண்டு ஆண்டுகால தடைக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அடுத்த ஆண்டு மீண்டும் ஐபிஎல்-ல் களமிறங்குகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் லயன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா, தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இரண்டு வருடமாக எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. எங்கள் அணியின் பயிற்சியாளர் என அனைவருக்கும் நன்றி. அடுத்த வருடம் குஜராத் அணி விளையாடாது. எனவே, அடுத்த வருடம் முதல் நான் எந்த அணிக்கு ஆடினாலும், எப்போதும் போல உங்களுடைய ஆதரவை எனக்கு தர வேண்டும்" என்று பேசியுள்ளார்.
It's our last match today and skipper @ImRaina has a special message for all our fans. Thank you all for the love & support! #GameMaariChhepic.twitter.com/eEKIOfw8rm
— The Gujarat Lions (@TheGujaratLions) 13 May 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.