Advertisment

'காலை சூரிய உதயம் விசேஷம்': சூர்யாவை சந்தித்த இந்திய ஜாம்பவான் சச்சின் ட்வீட்!

நடிகர் சூர்யா மும்பையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
Martin Jeyaraj
Feb 16, 2023 16:16 IST
Surya Poses With Sachin Tendulkar In Mumbai Tamil News

National award-winning actor Suriya on Thursday dropped a picture with the cricket legend Sachin Tendulkar

Suriya meets Sachin Tendulkar Tamil News: தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது, 'சிறுத்தை', 'வீரம்', 'விசுவாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

இந்தப் படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா நேற்று மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படத்தை நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "மரியாதை மற்றும் அன்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நட்சத்திர நடிகர் சூர்யா பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Cricket #Sports #Sachin Tendulkar #Surya #Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment