Suryakumar Yadav | IPL 2024 | Mumbai Indians: உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான வலம் வருபவர் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ். ஐ.பி.எல். தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அவர், கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஆனார். அதன்பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் எந்த தொடரிலும் விளையாடாமல் இருந்து வருகிறார்.
மேலும் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்கிற குடல் இறக்க பாதிப்பிற்காக அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்த சிகிச்சையில் இருந்துள்ள மீண்டுள்ள அவர் நீண்ட நாள் ஓய்விற்கு பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், சூரியகுமார் யாதவ் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் சில பயிற்சி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதையடுத்து அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையலாம். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைவதற்கு முன்னதாக 100 சதவிகித உடல் தகுதியுடன் இருக்கிறார். மேலும், போட்டிகளில் பங்கேற்க தயாராக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சூரியகுமார் யாதவ் முழு உடல் தகுதியுடன் திரும்பி இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கொண்டுவந்துள்ளது. ஏனென்றால், நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் இல்லாதது பெரும் குறையாக பார்க்கப்பட்டது. மும்பை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
தற்போது சூரியகுமார் நாளை அல்லது நாளை மறுநாள் மும்பை அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 7ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“