Advertisment

சூரியகுமார் அதிரடிக்கு ஆவேஷ்கான் ஆலோசனை காரணமா? ட்ரெண்டிங் மீம்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவரைப் புகழ்ந்து இணையவாசிகள் மீம்ஸ் போட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Suryakumar Yadav trending memes in tamil

சூர்யகுமார் யாதவ் குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள மீம்ஸ்கள் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

India vs West Indies 3rd T20 | Suryakumar Yadav trending tamil memes: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Advertisment

ட்ரெண்டிங் மீம்ஸ்

இந்திய அணியின் முன்னணி வீரரான சூர்யகுமார் யாதவ் கடந்த சில போட்டிகளாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 44 பந்துகளில் 83 ரன்கள் விளாசி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி சொல்லும், "இதைதான் எதிர் பார்த்தோம்" என்ற வசனத்தை, அப்படியே சூர்யகுமார் யாதவை பார்த்து இந்திய ரசிகர்கள் சொல்வதாக இணைய வாசிகள் மீம்ஸ் போட்டுள்ளனர்.

publive-image

திலக் வர்மா 49 ரன்களில் இருந்த போது, ஹர்திக் பாண்டியா சிக்சர் விளாசி ஆட்டத்தை முடித்தார். இந்த புகைப்படத்தையும் விராட் கோலியை ஃபினிஷ் செய்ய வேண்டும் என்பதற்காக தோனி விட்டு கொடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டுள்ளனர். அதில் தோனி - விராட் கோலி புகைப்படத்தை வைத்து "Friend i want" என்றும், ஹர்திக் பாண்டியா - திலக் வர்மா புகைப்படத்தை வைத்து "Friend i got" என்றும் குறிப்பிட்டு மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

publive-image

சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 10 பவுண்டர், 4 சிக்சர்கள் உட்பட 83 ரன்க்ள் குவித்தார். இதற்கு முன் 2வது டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவின் தோளில் கைவைத்து ஆவேஷ் கான் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்ததை போல் புகைப்படம் வெளியாகியது. இதனை ஒப்பிட்டு, சூர்யகுமார் யாதவின் ஆட்டத்திற்கு காரணமே ஆவேஷ் கான் வழங்கிய ஆலோசனை தான் என்று மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

publive-image

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அறிமுகமான திலக் வர்மா, முதல் டி20 தொடரிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு அரைசதம் உட்பட மொத்தமாக 139 ரன்களை விளாசியுள்ள திலக் வர்மாவை ரசிகர்களும், இந்திய அணி ஜாம்பவான்களும் பாராட்டி வருகின்றனர். இதனை வைத்து ஜகமே தந்திரம் படத்தில் வரும், "தொடக்கம்.. இனிய தொடக்கம்" என்று திலக் வர்மாவுக்காக மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

publive-image

கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை முடித்து, திலக் வர்மா அரைசதம் விளாசும் வாய்ப்பில் மண்ணை அள்ளி போட்டார். அதனை கிண்டல் செய்யும் வகையில் பரிதாபங்கள் சுதாகர் ஹர்திக்கை பார்த்து, "ஐயா நீங்க தோனி தான்னு நாங்க ஒத்துக்கிறோம். ஆனால் தயவு செஞ்சு இப்படிலாம் பண்ணாதீங்க" என்று சொல்வதாக அசத்தல் மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket India Vs West Indies Suryakumar Yadav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment