ஆஸி.க்கு எதிரான டி-20 அணி அறிவிப்பு : தினேஷ் கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா திரும்புகிறார்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா அணிக்கு திரும்புகிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா அணிக்கு திரும்புகிறார்கள்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
T-20 indian team announced, T-20 indian team against australia, india vs australia T-20 teams

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா அணிக்கு திரும்புகிறார்கள்.

Advertisment

ஒரு நாள் கிரிக்கெட்டில் உலகில் முன் வரிசையில் இருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது. 5 ஒருநாள் போட்டிகளில் 4-ஐ இந்தியா வென்றது. இந்த வெற்றியின் மூலமாக தர வரிசையில் உலகில் முதல் இடத்தை இந்திய அணி பெற்றிருக்கிறது.

அடுத்து இரு அணிகளும் 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் டி-20 போட்டி, அக்டோபர் 7-ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் போட்டித் தொடர் நிறைவுபெற்ற அக்டோபர் 1-ம் தேதி இரவே டி-20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி ஒருநாள் போட்டி அணியில் இடம்பெற்றவர்களில் உமேஷ் யாதவ், முகம்மது ஷமி ஆகியோர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். கூடுதலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக்கும், டி-20 ஸ்பெஷலிட்டான சீனியர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Advertisment
Advertisements

இரு அணிகளின் விவரம் வருமாறு:

இந்திய அணி: 1. விராட் கோலி(கேப்டன்) 2. ரோஹித் சர்மா 3. ஷிகர் தவான் 4. கே.எல்.ராகுல் 5. மணிஷ் பாண்டே 6. கேதார் ஜாதவ் 7. தினேஷ் கார்த்திக் 8. எம்.எஸ்.டோனி 9. ஹர்திக் பாண்ட்யா 10. குல்தீப் யாதவ் 11. யுஸ்வேந்திர சாஹல் 12. ஜஸ்பிரித் பும்ரா 13. புவனேஷ்வர் குமார் 14. ஆசிஷ் நெஹ்ரா 15. அக்சர் பட்டேல்.

ஆஸ்திரேலிய அணி: 1. ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்) 2. டேவிட் வார்னர் 3. ஜேசன் பெக்ரெண்டார்ஃப் 4. டான் கிறிஸ்டியன் 5. நாதன் கௌல்டர்- நீல் 6. பேட்ரிக் கம்மின்ஸ் 7. ஆரோன் ஃபிஞ்ச் 8. டிராவிஸ் கெட் 9. மோசிஸ் ஹென்றிக்ஸ் 10. கிளென் மேக்ஸ்வெல் 11. டிம் பெயின் 12. கேன் ரிச்சர்ட்சன் 13. ஆடம் சம்பா

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: