T20 World Cup 2022 Tamil News: 7-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்தத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றன.
இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. வழக்கம் போல் இந்த போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டிகளுக்கும் இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கபட்டத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், இந்த உலகக் கோப்பை தவிர்க்க முடியாத நிகழ்வாக அமைகிறது.
82 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் 16 சர்வதேச அணிகளைச் சேர்ந்த உலகின் சிறந்த வீரர்களைக் காண டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இது 2020 ஆம் ஆண்டு மகளிர் டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக ஐசிசி நிகழ்வுகளில் முழு மைதானங்களுக்குத் திரும்புவதைக் குறிக்கிறது. அந்த இறுதிப் போட்டிக்கு 86,174 ரசிகர்கள் மெல்போர்னில் திரண்டு இருந்தார்கள்.
தற்போது அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது. கூடுதல் நிற்கும் அறை டிக்கெட்டுகள் விற்கப்பட்ட நிலையில், அவையும் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுப்போகின.
From Indonesia to Vanuatu 🌏🏆
— ICC (@ICC) September 14, 2022
The journey continues for the ICC Men's #T20WorldCup Trophy Tour, driven by @Nissan 🚗 pic.twitter.com/ofw4s1BGiK
இந்த நிகழ்வுக்கு அருகில் அதிகாரப்பூர்வ மறுவிற்பனை தளம் தொடங்கப்படும். அங்கு ரசிகர்கள் முக மதிப்பில் டிக்கெட்டுகளை பரிமாறிக்கொள்ளலாம். இன்னும் சில டிக்கெட்டுகள் உள்ளன. எனவே ரசிகர்கள் தங்களுடைய டிக்கெட்டை பாதுகாப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil