Advertisment

ஷாகின் ஷா அப்ரிடி: இந்திய ஸ்டார்களுக்கு காத்திருக்கும் சவால்; சமாளிப்பார்களா?

டி-20 உலக கோப்பை போட்டியில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் குறி வைக்கும் முக்கிய வீரராக சூர்யகுமார் யாதவ் இருப்பார்.

author-image
Martin Jeyaraj
New Update
T20 World Cup: Shaheen Afridi vs Kohli and Rohit, key BATTLES to watch ind vs pak

IND vs PAK clash: key battles to watch out for in the upcoming T20 World Cup 2022 clash between India and Pakistan Tamil News

T20 World Cup - IND vs PAK clash - key battles to watch out Tamil News: 8 – வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்தத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றன.

Advertisment

இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. வழக்கம் போல் இந்தப் போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

T20 World Cup: அலைமோதும் ரசிகர்கள்… விற்று தீர்ந்த IND Vs PAK போட்டிக்கான டிக்கெட்டுகள்!

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா

டி-20 உலக கோப்பை போட்டிகள் தொடங்கும் முன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய உள்ளூர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன் பிறகு 23 ஆம் தேதி அன்று இந்தியா அணி பாகிஸ்தானுடன் மோதும்.

முக்கிய மோதல்கள்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டங்கள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்த நிலையில், இவ்விரு அணிகளும் ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு (ஆகஸ்ட் 28), டி-20 உலக கோப்பை போட்டியில் தான் விளையாடவுள்ளன. இரு அணிகளின் நாடுகளுக்கு இடையேயான அரசியல் சூழல் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக இருதரப்பு தொடர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இவ்விரு அணிகளும் இதுபோன்ற பெரிய தொடர்களில் தான் சந்திக்கின்றன. எனவே, ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருக்கும் எதிர்பார்ப்பை, தற்போது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளைப் பொறுத்தவரை, இரு அணிகளிலும் திறன்மிகுந்த வீரர்கள் உள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு வரிசையில் இரு அணிகளுமே சமபலம் பொருந்திய அணிகளாகவே உள்ளன. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி காயத்தில் இருந்து மீண்டுள்ளார். இந்த நற்செய்தி அந்த அணியின் பந்துவீச்சு வரிசைக்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது

publive-image

மறுபுறம், இந்தியாவில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிர்ட் பும்ரா காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக இந்திய அணி முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் போன்ற முன்னணி வீரர்களை அணியில் இணைத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக வலது கை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவரும் காயத்தால் அவதியுற்று வரும் நிலையில், அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் கிடைத்துள்ள நிலையில், ஆடும் லெவன் குறித்த விவாதங்களும், மேட்ச்-அப்-களும், முக்கிய மோதல்கள் குறித்த பேச்சுகளும் நடந்து வருகிறன்றன. அந்த வகையில், இந்த அணிகளில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய 3 முக்கிய மோதல்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

ஷாஹீன் அப்ரிடி vs கோலி, ரோகித்

publive-image

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தான் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி இந்தியாவின் டாப் ஆடரை கலங்கடிக்க செய்தார். அவரது முதலாவது ஓவரிலே இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் அவர் வீசிய 3வது ஓவரின் முதல் பந்திலே கேஎல் ராகுலின் விக்கெட்டை சாய்த்தார். தொடர்ந்து அரைசதம் அடித்து சிறப்பான விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் கோலியின் விக்கெட்டையும் கைப்பற்றி மிரட்டினார் ஷாஹீன் அப்ரிடி.

பட்ஜெட்டே 90 கோடிதான் மேன்… பாகிஸ்தான் பத்திரிகையாளரை வறுத்துதெடுக்கும் நெட்டிசன்கள்!

தற்போது அவர் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் களமாட இருக்கிறார். காயம் காரணமாக சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. போதிய ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஷாஹீன் அப்ரிடி. அவரின் பந்துவீச்சு இம்முறை இந்திய அணியின் மும்மூர்த்திகள் தாக்குபிடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் vs பாபர் மற்றும் ரிஸ்வான்

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் உள்ளனர். அந்த அணியினர் அதிக ஸ்கோரை எட்டவும், எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும் சேசிங் செய்யவும் இந்த ஜோடி தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறார்கள். கடந்த முறை துபாயில் நடந்த போட்டியில் பாபர் மற்றும் ரிஸ்வான் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளினர். மேலும், விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஆனால், இம்முறை அவர்கள் சந்திக்க இருப்பது ஒரு மாறுபட்ட பந்துவீச்சு வரிசை. இந்த வரிசையில் மிரட்டல் விடுக்கும் முன்னணி பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் பாபர் - ரிஸ்வான் காம்போவை கண்டிப்பாக உடைக்க முயற்சிப்பார்கள். அதனால், இம்முறை மோதல் சற்று கூடுதல் சுவாரசியமாக இருக்கும்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் vs சூர்யகுமார் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றோர் டாப் வரிசையில் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இவர்களை மட்டும் குறி வைக்க மாட்டார்கள். அவர்கள் குறி வைக்கும் முக்கிய வீரராக சூர்யகுமார் யாதவ் இருப்பார்.

publive-image

உலக கிரிக்கெட்டில் ரெட்-ஹாட் ஃபார்மில் இருக்கும் முன்னணி வீரராக அவர் இருந்து வரும் நிலையில், அவருக்கென தனி திட்டங்களுடனும், யுத்திகளுடனும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் களமிறங்குவார்கள். மேலும், அவரது பேட்டிங்கை கட்டுப்படுத்தி அவரின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தவே நினைப்பார்கள்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Virat Kohli Sports Rohit Sharma Cricket Indian Cricket Team Kl Rahul T20 Indian Cricket Worldcup India Vs Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment