இந்தியாவால் அரையிறுதிக்கு முன்னேற முடியுமா?…. சாத்தியங்கள் என்னென்ன…!

Can India reach the semi-final? what are the permutations Tamil News: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அல்லது ஸ்காட்லாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றிடம் தோற்க வேண்டும்.

T20 World Cup Tamil News: Can India reach the semi-final? what are the permutations tamil

T20 World Cup Tamil News:  7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான ‘சூப்பர்-12’ ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதன் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி.

விமர்சனம்

நடப்பு சீசனில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பலம் பொருந்திய அணியாக வலம் வந்த இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை தும்சம் செய்தது. ஆனால், தொடர்ந்து நடந்த ‘சூப்பர்-12’ லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளிடம் பொட்டிப் பாம்பாய் படுத்தது. மேலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மோசமான தோல்வியை கண்ட அணி என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்தியா அரையிறுதிக்கு முன்னேற என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

இந்திய அணி இடம்பிடித்துள்ள குரூப் – 2 ல் உள்ள பாகிஸ்தான் அணி ஏற்கனேவே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கைப்பற்றி விட்டது. இன்னும் ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புகளைப் பற்றி நாம் பேசினால், குரூப் 2ல் ஒரு அணி தகுதி பெற நெட் ரன்ரேட் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய அணி மீதமுள்ள இரண்டு லீக் ஆட்டங்களிலும் வென்றாக வேண்டும்.

நேற்றை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் அந்த அணியின் நெட் ரன் ரேட் +0.073 ஆக மாற்றம் கண்டுள்ளது. எனவே, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அல்லது ஸ்காட்லாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றிடம் தோற்க வேண்டும்.

இவ்வாறு நடந்தால் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணிக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் கிடைக்கும்

தற்போது, நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட் +0.816 ஆகவும், ஆப்கானிஸ்தானின் நெட் ரன் ரேட் +1.481 ஆகவும் உள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி, “நெட் ரன் ரேட்டை மனதில் கொண்டு நாங்கள் களமிறங்கவில்லை. மாறாக இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பை பெற வேண்டும் என்கிற நோக்கத்திலே விளையாடினோம்.” என்றார்.

மீதமுள்ள 2 ஆட்டங்களில் இந்திய அணி ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது? இந்த மூன்று அணிகளில் அரையிறுதி வாய்ப்பை தட்டிச் செல்ல போகும் அந்த அணி எது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: T20 world cup tamil news can india reach the semi final what are the permutations tamil

Next Story
ஊக்க மருந்து தடை முடிவு… 15 மாதத்திற்கு பின்னர் டென்னிஸில் ஷரபோவா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com