T20 World Cup Tamil News: 7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான ‘சூப்பர்-12’ ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி உலக்கோப்பை தொடரில் முதன் முறையை பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்தது.

எனினும், அரையிறுதி வாய்ப்பை பெறும் அணிகளுடனான ரேஸில் உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அதன் அடுத்த லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகிற ஞாயிற்று கிழமை (அக்.31ஆம் தேதி) மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.
பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த கேப்டன் விராட் கோலியின் (57) அடித்த அரைசதம் வீணானது. மிடில் – ஆடரில் களம் கண்ட ரிஷப் பண்ட் (39) ஆறுதல் அளித்தார். ஆல்ரவுண்டர் வீரர்களான ரவீந்திர ஜடேஜா (13), ஹர்டிக் பாண்டியா (13) பெரிதும் சோபிக்கவில்லை.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா விக்கெட் ஏதும் எடுக்காமல் வெறுங்கையுடன் திரும்பினர். ஆல்ரவுண்டர் வீரர் ஹர்டிக் பாண்டியாவுக்கு பேட்டிங்கின் போது ஏற்பட்ட காயத்தால் அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை.

இந்நிலையில், ஹர்டிக் பாண்டியா தற்போது காயத்தில் இருந்து மீண்டு விட்டதாகவும், அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம் தான் என்று சில கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவிகின்றனர். ஆனால், ஹர்டிக் பாண்டியாவை அணியில் இருந்து வெளியேற்ற வாய்ப்பில்லை என தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து நமக்கு (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்) அளித்த பேட்டியில், “ஹர்டிக் பாண்டியா நேற்றை வலைப்பயிற்சியில் காலில் ஸ்பைக் இல்லாமல் தான் பந்துவீச்சு பயிற்சியை மேற்கொண்டார். அதாவது நல்ல ரன்னிங்கில் வந்து பந்து வீசவில்லை. ஆனால் அவர் வரும் நாட்களில் அவ்வாறு பந்துவீச வாய்ப்பு இருக்கிறது.

அணியில் இருந்து அவரை வெளியேற்றுவதை பொறுத்தவரை ஒரு வீரர் முதல் ஆட்டத்தில் சரியாக செயல்படவில்லை என்பதற்காக அவரை வெளியேற்றுவது என்பது தவறான ஒன்று. ஏனென்றால் இந்திய அணிக்கு ஒரு நல்ல பினிஷெர் தேவை. அந்த திறன் பாண்டியாவிடம் உள்ளது. அவர் முதல் பந்திலே சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்வார்.
■■■■■■■■■■■□□□ LOADING@hardikpandya7 | #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/hlwtrGDfNR
— BCCI (@BCCI) October 28, 2021
என்னை பொறுத்தவரை ஹர்டிக் பாண்டியவை உடனே அணியில் இருந்து வெளியேற்றுவது சரியாக இருக்காது. அணி நிர்வாகமும் அத்தகைய முடிவை எடுக்காது என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.

நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி கவனத்தில் கொள்ள வேண்டிவை குறித்து நாம் கேட்டபோது, “நியூசிலாந்து அணியினர் ஐசிசி நடந்தும் தொடர்களில் இந்திய அணிக்கு முட்டை கட்டை போடுபவர்களாவே இருந்துள்ளனர். ஆனாலும் இந்திய அணி தற்போது உள்ள வேகத்தில் அந்த அணியை வீழ்த்தவே நினைப்பார்கள்.
அந்த அணியின் இடது கை பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் வீசும் பந்துகளில் இந்திய அணியினர் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக அவர் வீசும் தொடக்க ஓவர்களை அதீத கவனத்துடன் சந்திக்க வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் அவர் நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை என்றாலும், உலக்கோப்பை தொடர் என வரும்போது அவரின் பந்துவீச்சு சற்று மாறுபட்டதாக இருக்கும்.

இந்திய அணியில் வீரர்களின் மாற்றத்தை பொறுத்தவரை பார்மில் இல்லாத புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்க்கலாம். ” என்று வர்ணனையாளர் முத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“