News about Pakistan, Ravichandran Ashwin and Dinesh Virat Kohli in tamil: 8வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அரங்கேறிய ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பட்டையை கிளப்பிய கோலி… பினிஷிங் கொடுத்த அஸ்வின்…

இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை இந்திய அணி துரத்திய போது 6.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. அதன்பின்னர், களத்தில் இருந்த ஹர்டிக் பாண்டியா – விராட் கோலி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றால், ‘லட்டு சாப்பிடுவது’ அந்த அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தார் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி.தனது ஸ்டைலில் சிக்ஸர், பவுண்டரிகளை தெறிக்கவிட்டு அசத்திய அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
கோலியுடன் ஜோடியில் இருந்த பாண்டிய கடைசி ஓவரின் முதல் பந்திலும், தினேஷ் கார்த்திக் 5வது பந்திலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு 1 பந்தில் 2 ரன்கள் என்று இருந்த நிலையில், அப்போது களமிறங்கிய அஸ்வின் நவாஸ் வீசிய கடைசி பந்தை லெக் சைடில் ஒயிட் வாங்கினார். பின்னர், மீண்டும் வீசப்பட்ட ரீ பாலில், பந்தை லாபமாக கவருக்கு மேல் அடித்தார். அந்த பந்து பவுண்டரிக்கு உருண்டியது. இதனால் இந்திய அணி த்ரில் வெற்றியை ருசித்தது. இந்திய அணியில் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 82 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
சந்திரமுகியா மாறுன கோலி… வைரலாகி வரும் அஸ்வின் வீடியோ…
இந்நிலையில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விராட் கோலி குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஸ்வின் தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் கிரிக்கெட் கிரிக்கெட் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், அஸ்வின் வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோவில் இந்தியா – பாஸ்கிதான் அணிகள் மோதிய ஆட்டம் குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோவில் அவர், ‘கோலி சந்திரமுகியா மாறிய கங்கா போல் தான் களத்தில் இருந்தார்’ என்று கூறி பிரம்மித்துள்ளார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு, இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. யூடியூப்-பிலும் இந்தவீடியோ நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும், தற்போதுவரை இந்த வீடியோவை 547,635 பேர் பார்த்துள்ளனர்.
அந்த வீடியோவில் அஸ்வின், “விராட் கோலி என்னங்க, என்ன புந்துடுச்சினு தெரில. ஆனா அவருக்குள்ள சத்தியமா எதோ புந்துடுச்சி. அதுல சந்தேகமே இல்ல. இந்த மாறிலாம் ஷாட்ஸ் ஆடுறது… ஷாட்ஸ் ஆஆ.. விடுங்க… அந்த 45 பாலுக்கு அப்பறம் அவரு, சந்திரமுகியா மாறின கங்காவ தான் பார்க்கணும். அந்த கண்ண வெறிச்சிட்டு ஜோதிகா ஒதல வா ன்னு சொல்ற மாறி, அப்படி கண்ண வச்சுக்கிட்டு அவர் என்னட்ட இங்க அடி அங்க அடின்னு சொன்னார்.” என்று அஸ்வின் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil