ENG vs PAK T20 world cup final match 2022, Head-to-head stats in tamil: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
மெல்போர்ன் மைதானத்தைப் பொறுத்தவரை, உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு ஒரே நேரத்தில் ஏறக்குறைய 1 லட்சம் ரசிகர்கள் அமரலாம். பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. மேலும், இந்த இரு அணிகளின் ஆட்டத்தை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிய சில புள்ளிவிவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இங்கிலாந்து vs பாகிஸ்தான்: நேருக்கு நேர்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கின்றன.
இதே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தான், 1992ல் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து, பாகிஸ்தான் அவர்களின் முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றனர்.
இந்த 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது இன்னும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் உள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பும், பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு செல்லும் வழியில், அதாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது.
டி20 உலகக் கோப்பையில், இங்கிலாந்து
ஒருநாள் உலகக் கோப்பையில், பாகிஸ்தான் 10 போட்டிகளில் 5-4 என்ற கணக்கில் தலை சிறந்த சாதனையை படைத்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை.
நடப்பு டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் பின்னடைவை சந்தித்தன. பாகிஸ்தான் ஜிம்பாப்வேயிடமும், இங்கிலாந்து அயர்லாந்திடமும் தோற்றன.
டி-20-யில் நேருக்கு நேர் மோதல் பொறுத்தவரை, இங்கிலாந்து அணி 18 – 9 என பாகிஸ்தானுக்கு எதிராக முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் முடிந்தது.
இரண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், இரு அணிகளும் டி20 போட்டியில் வெற்றி பெற்றதில்லை.
டி20 போட்டிகளில், இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானின் அதிகபட்ச மொத்த ரன் 232 மற்றும் குறைந்தபட்சம் 89 ரன்கள் ஆகும். பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த 221 மற்றும் குறைந்த பட்சம் 135 ரன்கள் ஆகும்.
இந்த ஆண்டு செப்டம்பரில் கராச்சியில் 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் எடுத்ததன் மூலம், த்ரீ லயன்ஸ் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணிக்காக அதிக டி20 ரன்களை எடுத்ததன் மூலம் கேப்டன் பாபர் அசாம்
இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் சார்பில் அதிக விக்கெட்கள் (14) வீழ்த்தியவராக ஹாரிஸ் ரவ்ஃப் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் கிரேம் ஸ்வான் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 17 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னிலை வகிக்கின்றனர்.
பாகிஸ்தானின் தொடக்க ஜோடிகளான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் அதிக பார்ட்னர்ஷிப் ரன்களை எடுத்துள்ளனர். இருவரும் 51 இன்னிங்ஸ்களில் 2509 ரன்கள் எடுத்துள்ளனர். இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் ஜோடியை (1897) 42 இன்னிங்ஸ்களில் இருந்து முந்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil