Advertisment

கிரிக்கெட் போட்டிகளில் ''டக் அவுட்'' இத்தனை வகை உள்ளதா?

கிரிக்கெட் போட்டிகளில் டக் அவுட் என்பது மோசனமான சாதனை என்றாலும் எத்தனை வகையான டக் அவுட் இருக்கிறது என்று தெரியுமா?

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket Duck out

கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் எத்தனை டக்அவுட் தெரியுமா?

உலகளவில் அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்ட விளையாட்டு பட்டியலில் கிரிக்கெட் போட்டிக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும் ஹாக்கியை தேசிய விளையாட்டாக கொண்ட இந்தியாவில் ஹாக்கியை விட கிரிக்கெட் போட்டிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம். ஒட்டுமொத்த இந்தியாவுமே கிரிக்கெட் ரசிகர்கள் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

Advertisment

கிரிக்கெட் போட்டியை கண்டுபிடித்தது இங்கிலாந்து என்று கூறினாலும் இந்தியா தான் அதற்கு அச்சாரம் என்று சொல்வார்கள். இந்தியாவில் விளையாடப்படும் கெட்டிப்புல் விளையாட்டு தான் நாளடைவில் கிரிக்கெட் போட்டியாக உருமாறியது என்றும் சொல்லப்படுவது உண்டு. அப்படிப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் இருக்கும் அதே நேரத்தில் மோசமான சில சாதனைகளும் இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில் மோசமான சாதனைகளில் ஒன்று டக்அவுட். ஒரு பெட்ஸ்மேன் களத்தில் இறங்கும்போது ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டம் இழந்தால் அதற்கு டக் அவுட் என்று சொல்வார்கள். ஒரு பேட்ஸ்மேன் எப்படி வேண்டுமானாலும் அவுட் ஆகலாம். ஆனால் டக் அவுட் மட்டும் ஆகிவிடவே கூடாது என்று நினைப்பார்கள். ஆனாலும் சில சமயங்களில் அவ்வாறு நடந்து விடுவது வழக்கம். அதேபோல் டக் அவுட்டில் 8 வகை டக் அவுட்கள் உள்ளன.

கிரிக்கெட்டில் உள்ள 8 வகையான டக் அவுட்

கோல்டன் டக்

ரசிகர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் வீரர்களால் மிகவும் பொதுவான மற்றும் பரவலாக பேசப்படும் ஒரு வார்த்தை கோல்டன் டக் அவுட். ஒரு பேட்ஸ்மேன் ஒரு இன்னிங்ஸில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தால் அதை கோல்டன் டக்அவுட் என்று சொல்வார்கள். 1995-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பின் தொடர்பவர்களுக்கு இது நன்றாக தெரிந்திருக்கும்.

1997 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 246 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 2-25 என்ற கணக்கில் தத்தளித்தபோது களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் வாஹ், தென்ஆப்பிரிக்க அணியின் ருடி பிரைசன் பந்துவீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து கோல்டன் டக் அவுட்டாக பெவிலியன் திரும்பினார்.

சில்வர் டக்

ஒரு பேட்ஸ்மேன் தனது இன்னிங்ஸில் தான் சந்தித்த 2வது பந்தில் அவுட் ஆனதை சில்வர் டக் என்று அழைப்பார்கள். ஆனால் இந்த வார்த்தையை பொதுவாக கிரிக்கெட்டில் வர்ணனையாளர்கள் உள்ளிட்ட யாரும் பயன்படுத்துவதில்லை. 2-வது பந்தில் ஆட்டமிழந்தால் பொதுவாக டக் அவுட் என்றே குறிப்பிடப்படுகிறது.

வெண்கல டக்

ஒரு பேட்ஸ்மேன் தான் சந்தித்த 3-வது பந்தில் டக் அவுட் ஆக ஆட்டமிழந்தால், அதைச் சொல்லத் தேவையில்லாமல், ஸ்கோர் போர்டில் அவர்களின் பெயருக்கு நேராக ஒரு வெண்கல வாத்து உலா வரும். இதற்கு வெண்கல டக் அவுட் என்று சொல்வார்கள். இதையும் அதிகம் பயன்படுத்துவதில்லை.

டைமண்ட் டக்

டயமண்ட் டக் என்பது எல்லாவற்றிலும் மிகக் கொடூரமானது, ஒரு பேட்ஸ்மேன் ரன் அவுட் ஆவதோ, களமிறங்கும் போது நேரம் முடிந்து விட்டதோ, அல்லது ஒரு பந்தை எதிர்கொள்ளாமல் ரன்னரப்பில் இதுக்கும்போது ஆட்டம் முடிவதையோ டைமண்ட் டக் அவுட் என்பார்கள். பேட்ஸ்மேன் ஒரு வைட் பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு, ஒரு பந்தை கூட சந்திக்காமல் அவுட் ஆனாலும் அது டைமண்ட் டக் அவுட் தான்.

ராயல் டக்

ஒரு இன்னிங்சின் தொடக்கத்தில் முதல் பந்தில் ஆட்டமிழப்பது ராயல் டக் அவுட். இங்கிலாந்தின் அலஸ்டர் குக், 2013 ஆம் ஆண்டு பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், ரியான் ஹாரிஸ் பந்துவீச்சில் இன்னிங்சின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

லாஃபிங் டக்

ஒரு இன்னிங்சில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் டக் அவுட் ஆக வெளியேறினால் அது லாஃபிங் டக் அவுட் என்று அழைக்கப்படுகிறது.

ஜோடி டக்

ஒரு பேட்ஸ்மேன் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தால் அதற்கு ஜோடி டக் அவுட் என்று சொல்வார்கள். ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர், 1998 இல் ராவல்பிண்டியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இதே மாதிரி ஆட்டமிழந்தார்.

கிங் ஜோடி

ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோல்டன் டக் அவுட் ஆகி அதே டெஸ்டின் 2வது இன்னிங்ஸிலும் முதல் பந்தில் அவுட் ஆனால் அதற்கு கிங் ஜோடி டக் அவுட் என்று சொல்வார்கள். ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment