கிரிக்கெட் விளையாட்டில் இன்றைய காலக்கட்டத்தில் சதம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் கிரிக்கெட் வளர்ச்சி அடைந்து வந்த காலக்கட்டத்தில் ஒரு வீரர் சதம் அடிப்பது அவரின் புதிய மைல்கல் என்று சொல்லப்படுவது வழக்கம். ஒரு வீரர் ஒரு இன்னிங்சில் 100 ரன்களை கடக்கும்போது அவர் சதம் அடித்ததாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 199 ரன்கள் வரை சதமாக கணக்கிடப்படும் இந்த ரன் 200-ஐ கடக்கும்போது இரட்டை சதம் என்று கணக்கிடப்படுகிறது.
Advertisment
ஒரு கிரிக்கெட் வீரர் தனது வாழ்நாளில் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளில் எத்தனை சதம் அடித்துள்ளார் என்பது அவரின் கிரிக்கெட் வாழ்வின் புள்ளிவிவர பட்டியலில் இடம் பெற்று விடும். இதில் தற்போதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் 400 ரன்கள் குவித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரைன் லாரா இருக்கிறார். அவருக்கு அடுத்து 300 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய வீரர் சேவாக் உள்ளிட்ட சில வீரர்கள் இருக்கின்றனர்.
கிரிக்கெட் மைதானம்
இன்றைய காலக்கட்த்தில் கிரிக்கெட் போட்டிகளில் சதம் கடந்த வீரர்களின் பட்டியல் நீளமாக இருந்தாலும் ஒரு நாள் போட்டிகள் வருவதற்கு முன் நடந்ந டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் சதம் அடிப்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை கிரிக்கெட் விளையாட்டில் சதம் அடிப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அன்றைய விதிமுறைகளும், மைதானத்தின் தன்மையும் தான் என்று சொல்லலாம்.
Advertisment
Advertisements
கிரிக்கெட் உலகில் முதல் சதம்
1769-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி செவெனோக்ஸ் வைனில் நடந்த டியூக் ஆஃப் டோர்செட்ஸ் மற்றும் வ்ரோதம் அணிக்ளுக்கு இடையில் நடந்த உள்ளூர் போட்டியில் வ்ரோதம் அணிக்காக களமிறங்கிய ஜான் மின்ஷூல் 107 ரன்கள் எடுத்ததே கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் சதமாகும். அதனைத தொடர்ந்து 1775-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பிராதால்ப்பென்னி டவுனில் நடந்த ஹாம்ப்ஷயர் மற்றும் சர்ரே அணிக்ளுக்கு இடையிலான ஆட்டத்தில் சர்ரே அணியின் 136 ரன்கள் குவித்தார். இதுவே உயர்தர கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதமாகும்.
டெஸ்ட் போட்டியில் முதல் சதம்
சர்வதேக டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த சார்லஸ் பேனர்மேன்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவின் சார்லஸ் பேனர்மேன் அடித்துள்ளார். 1877-ம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டியில், சார்லஸ் பேனர்மேன் 165 ரன்கள் குவித்தார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதமாகும். அதன்பிறகு பல வீரர்கள் சதம் அடித்திருந்தாலும் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் முதல் சதம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதம் அடித்த டெனிஸ் அமிஸ்
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒருநாள் போட்டி தொடங்கிய சமயத்தில் 1972-ம் ஆண்டு ஓல்ட் ட்ராஃபோர்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் டெனிஸ் அமிஸ் 103 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இது 2-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு பல வீரர்கள் சதம் கடந்து சாதனை படைத்திருந்தாலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 49 ஒருநாள் போட்டி சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து விராட்கோலி (46) ரிக்கி பாண்டிங் (30) ரோஹித் சர்மா (30) ஆகியோர் உள்ளனர்.
டி20 போட்டிகளில் முதல் சதம்
சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில்
ஒருநாள் போட்டிகளில் இருந்து டி20 போட்டிகள் வளர்ச்சி பெற தொடங்கிய காலக்கட்டத்தில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஜோகனஸ்பார்க்கில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் 117 ரன்கள் குவித்தார். இதுவே டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட முதல் சதமாகும். கிறிஸ் கெயில் இதுவரை டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் சதம் கடந்த முதல் இந்தியர்
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்காக முதல் சதம் அடித்த கேப்டன் கபில்தேவ்
இந்திய கடந்த 1974-ம் ஆண்டு ஒருநாள் தொடரில் அறிமுகமாகி இருந்தாலும் 9 வருடங்களுக்கு பிறகே சதம் கிடைத்தது. 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரின் 20-வது போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 266 ரன்கள் குவித்தது. கேப்டன் கபில்தேவ், 16 பவுண்டரி 6 சிக்சருடன் 175 ரன்கள் குவித்து இந்தியாவுக்கான முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதே ஆண்டு உலககோப்பை தொடரையும் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“