Advertisment

World Cup Cricket Special : முதல் உலககோப்பை கிரிக்கெட் : இந்தியா செய்தது என்ன?

முதல் உலககோப்பை தொடரில் விளையாடிய இந்திய அணியில் சுனில் கவாஸ்கர் இந்தியாவின் சார்பில் அதிக ரன்கள் குவித்திருந்தார்.

author-image
D. Elayaraja
New Update
1975 World Cup WI Team

முதல் உலககோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி

17-ம் நூற்றாண்டுகளின் இறுதியில் இருந்து விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகள் 18-ம் நூற்றாண்டின் நடுவில் சர்வதேச அளவில் விளையாடப்பட்டது. கிரிக்கெட் போட்டிகளின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்தில் தான் அதிகம் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டது. 2 இன்னிங்ஸ் கொண்ட டெஸ்ட் போட்டிகளாக விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டி 1970-ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டியும் விளையாடப்பட்டது.

Advertisment

ஒருநாள் போட்டி தொடங்கிய வரலாறு

1971-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி முதல் கிரிக்கெட் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் விளையாடியது. முதலில் டெஸ்ட் போட்டியாக தொடங்கப்பட்ட இந்த போட்டி 3 நாட்கள் முடிந்தபோது வானிலை காரணமாக கைவிட முடிவு செய்யப்பட்டபோது இரு அணிகளுக்கும் தலா 40 ஓவர்கள் (ஓவருக்கு 8 பந்துகள்) கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 191- ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 34.6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஒருநாள் போட்டியை வென்ற அணி ஆஸ்திரேலியா என்ற சிறப்பை பெற்றது.

1975 World Cup Aus Team

முதல் உலககோப்பை தொடர் 1975

அதன்பிறகு இரு நாடுகள் இணைந்து விளையாடும் ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட்டது. 4 வருடங்கள் கழித்து 1975-ம் ஆண்டு முதல் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது  இங்கிலாந்தில் 1975-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெற்ற இந்த உலககோப்பை தொடரில்,  அப்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீயன்ஸ், இலங்கை, ஈஸ்ட் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன.

இந்த தொடருக்கு ப்ருடென்ஷியல் அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்தால், முதல் உலககோப்பை தொடருக்கு ப்ருடென்ஷியல் கோப்பை என்று பெயரிடப்பட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

ஒரு போட்டியில் மட்டுமே வென்ற இந்தியா

முதல் உலககோப்பை தொடரில் ஸ்ரீவாஸ் வெங்கடராகவன் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது. டேனிஸ் அமீஸ் 137 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அபித் அலி 2 விக்கெட் வீழ்த்தினார்.

335 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.  அதிகபட்சமாக குண்டப்பா விஸ்வநாத் 37 ரன்களும், கவாஸ்கர் 36 ரன்களும், அன்ஷூமன் கெய்க்வாட் 22 ரன்களும் எடுத்தனர்.

உலககோப்பை தொடரில் இந்தியாவின் முதல் வெற்றி

1975ஜூன் 11-ந் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா – ஈஸ்ட் ஆப்பிரிக்கா அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த ஆப்பிக்க அணி 55.3 ஓவர்களில் 120 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் மதன் லால் 3 விக்கெட்டுகளும், அபித் அலி, அமர்நாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து 121 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கவாஸ்கர், 65 ரன்களும், ஃபரோக் எஞ்சினியர் 54 ரன்களும் எடுக்க 29.5 ஓவர்கள் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.

1975 World Cup Ind vs NZ

3-வது போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அத்துடன் இந்திய அணியில் உலககோப்பை கனவும் தகர்ந்தது. 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. அதேபோல் ஒரு வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, வெற்றிக்கணக்கை தொடங்காத இலங்கை மற்றும் ஈஸ்ட் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் தொடரில் இருந்து வெளியேறியது.

அரையிறுதி போட்டிகள்

முதல் அரையிறுதி போட்டியில், ஏ. பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலூந்து அணியும் பி பிரிவில் 2-வது இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 36.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது. மேக் டோனஸ் 27 ரன்களும், அர்னால்ட் 18 ரன்களம் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 28.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது அரையிறுதி போட்டியில், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 52.2 ஓவர்களில் 158 ரன்களில் சுருண்டது. க்ளன் டர்னர் 36 ரன்களும், அரைசதம் கடந்த ஹாவர்த் 51 ரன்களும் எடுத்தனர். 152 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 40.1 ஓவர்களில 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டி : வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா

ஜூன் 21, 1975-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தது. க்ளைவ் லாய்டு 102 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கேரி கில்மோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 292 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வெற்றியை நெருங்கினாலும், இறுதியில் 58.4 ஓவர்களில் 274 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இயான் சேப்பல் 62 ரன்களும், ஆலன் டர்னர் 40 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் 5 வீரர்கள் ரன அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். கெயித் பைஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Gavaskar

இந்த போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் உலககோப்பையை வென்று அசத்தியது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வென்றது. ஆனாலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் இறுதிப்போட்டியில் விளையாடிய அணிகளில் ஒரு வீரர் கூட இடம் பெறிவில்லை.

அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர்

முதல் உலககோப்பை தொடரில் 2 சதங்கள் விளாசிய நியூசிலாந்து அணியின் க்ளைன் டர்னர் 4 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 171 ரன்களுடன் 333 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடிதார். இங்கிலாந்து அணியின் டேனிஸ் அமீஸ் அதிகபட்சமாக 137 ரன்களுடன் 243 ரன்கள் குவித்து 2-வது இடத்தையும், பாகிஸ்தான் அணியின் மஜித் கான் 3 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்து 29 ரன்களுடன் 3-வது இடத்தை பிடித்தார். இந்தியாவின் சுனில் கவாஸ்கர் அதிகபட்சமாக 65 ரன்கள் குவித்து 113 ரன்களுடன் இந்த பட்டியலில் 15வது இடத்தை பிடித்தார்.

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்

ஆஸ்திரேலிய அணியின் கில்மோர் 2 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜூலியன், பைஸ் ஆகியோர் தலா 10 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர். இந்திய அணி தரப்பில் அபித் அலி 6 விக்கெட் வீழ்த்தி இந்த பட்டியலில் 10-வது இடத்தை பிடித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment