Advertisment

தெ.ஆ டி20 தொடர் தொடக்கம்: இந்திய அணிக்கு பின்னடைவு; முக்கிய 2 வீரர்கள் விலகல்

Tamil Sports Update : இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
தெ.ஆ டி20 தொடர் தொடக்கம்: இந்திய அணிக்கு பின்னடைவு; முக்கிய 2 வீரர்கள் விலகல்

Indian Captain KL Rahul And Kuldeep Yadav Leave In Squad For Injury : தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியில் காயம் காரணமாக 2 முக்கிய வீரர்கள் விலகியுள்ளது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்றி மேற்கொண்டு வரும் நிலையில், காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், மற்றும் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனான களமிறங்கிய ராகுல் அதிக ரன்கள் குவித்தவர்க்ள பட்டியலில் 2-வது இடத்தை பெற்றார். மேலும் இவரது தலைமையில் லக்னோ அணி அறிமுக தொடரில் ப்ளேஅப் சுற்க்கு தகுதி பெற்று அசத்தியது.

அதே போல் கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வந்த சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஏற்கனவே இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவரும் காயம் காரணமாக விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அதே சமயம் இவர்கள் இருவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்டவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cricket Bcci Kuldeep Yadav K L Rahul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment