Pro-kabaddi-league 2023 | pro-kabaddi 10 | tamil-thalaivas: 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் வருகிற டிசம்பர் 2ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐ.பி.எல் தொடரைப் போலவே சொந்த மைதானம் மற்றும் எதிரணியின் மைதானம் என 12 அணிகள் மோதும் இந்த தொடர் 12 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்க உள்ளது.
முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த 9, 10ம் தேதிகளில் மும்பையில் நடந்தது. இந்த ஏலத்தில் பங்கேற்ற 12 அணிகளும் வீரர்களை முந்தியடித்து வாங்கின. இந்நிலையில், இந்த தொடருக்கான சென்னையை தளமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணி இளம் மற்றும் அனுபவம் கலந்த வீரர்களை வாங்கிச் சேர்த்துள்ளது. முந்தைய சீசனில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட நட்சத்திர வீரரான பவன் செராவத்தை அணி வாங்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவரை வாங்க பல அணிகள் போட்டி போட்டன. இறுதியில் பவன் செராவத்தை ரூ. 2.6 கோடிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணி வாங்கியது.
முந்தைய சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக களமாடிய பவன் செராவத் தொடக்க ஆட்டத்திலே காயத்தால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் தொடரில் இருந்தே வெளியேறும் அபாயம் ஏற்பட்டது. அவர் இல்லாத தமிழ் தலைவாஸ் அணி வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது.
இந்த ஆண்டு பவன் செராவத்தை கைவிட்டு தலைவாஸ் அணி தங்கள் அணியில் உள்ள இளைஞர்களை வளர்க்க முடிவு செய்துள்ளனர். அவர்களுடன், கடந்த சீசனில் தங்கள் வெற்றியில் பெரும் பங்கு வகித்த நரேந்தர் கண்டோலா மற்றும் சாகர் ரதி போன்றவர்களை அவர்கள் தக்கவைத்துக் கொண்டனர். இந்த நிலையில், நடப்பு சீசனில் தலைவாஸ் அணி களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படும் ஆடும் செவன் வீரர்களை பார்க்கலாம்.
செண்டர் - நரேந்தர் கண்டோலா
நரேந்தர் கண்டோலா இந்த சீசனில் தமிழ் தலைவாஸின் முன்னணி ரைடராக இருப்பார். கடந்த சீசனில் அவர் சிறந்த ஃபார்மில் இருந்த அவர் 23 போட்டிகளில் 249 புள்ளிகளைப் பெற்றார். கண்டோலா 60% ரெய்டு வெற்றி விகிதத்தைக் கொண்டிருந்தார். அதே சமயம் அவரது டிஃபன்ஸ் ஸ்ட்ரைக் ரேட் 38% ஆக இருந்தது.
மேலும், நல்ல அனுபவத்தை அவர் கொண்டுள்ளதால், டிஃபன்ஸ் வரிசைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதை நிரூபிக்க முடியும். தமிழ் தலைவாஸின் பிகேஎல் போட்டிகளின் போது அனைவரது பார்வையும் அவர் மீதுதான் இருக்கும்.
— Tamil Thalaivas (@tamilthalaivas) October 19, 2023
லெஃப்ட் கார்னர் - மோஹித் ஜாகர்
மோஹித் ஜாகர் தமிழ் தலைவாஸ் அணியுடன் இரண்டு சீசன்களாக இருந்து வருகிறார். சீசன் 8ல் அறிமுகமானஅவர் 20 போட்டிகளில் 24 புள்ளிகளைப் பெற்றார். கடந்த சீசனில், அவர் தனது செயல்திறனை மேம்படுத்தி 34 புள்ளிகளுடன் முடித்தார். அவர் அதே வழியில் தொடர்ந்து முன்னேறி, இந்த சீசனில் அதிக டிஃபன்ஸ் புள்ளிகளைப் பெறுவார் என்று அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
ரைட் கார்னர் - எம் அபிஷேக்
எம் அபிஷேக் தமிழ் தலைவாஸால் வளர்க்கப்பட்ட மற்றொரு இளம் வீரர் ஆவார். அவர் கடந்த மூன்று சீசன்களாக அணியில் விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் நல்ல முன்னேற்றத்தை காட்டி வருகிறார். ரையிட் கவர் டிஃபென்டரான அவர் கடந்த சீசனில் 23 போட்டிகளில் 40 புள்ளிகளைப் பெற்றார்.
அபிஷேக் மற்றும் மோஹித் ஜாகர் என்ற இரட்டையர்கள் தமிழ் தலைவாஸின் இரண்டு கவர் டிஃபென்டர்களாக இருப்பார்கள். தேவைப்பட்டால், அணிக்கு ஆஷிஷ் மாலிக் மற்றும் ரோனக் பேக்அப் வீரர்களாக இருப்பார்கள்.
லெஃப்ட் இன் - அஜிங்க்யா பவார்
கடந்த சீசனில் பவன் செராவத் காயமடைந்த பிறகு, இரண்டு ரைடர்கள் சிறப்பான ஆட்டத்தை வழங்கினர். முதலாவது நரேந்தர் கண்டோலா, மற்றவர் அஜிங்க்யா பவார் ஆவார். இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அந்த இரு வீரர்களையும் தக்கவைத்துள்ளது. கடந்த சீசனில் பவார் 141 புள்ளிகளைப் பெற்றார். இந்த சீசனில் அவர் 150 புள்ளிகளை தொட முடியுமா என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
Diving into the season with a splash!#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #Season10 pic.twitter.com/vh80Rgx2ec
— Tamil Thalaivas (@tamilthalaivas) October 17, 2023
ரைட் இன் - செல்வமணி கே
மூன்றாவது ரைடருக்கான இடம் செல்வமணிக்கு இருக்கும். ஹிமான்ஷு துஷிர் மற்றும் ஹிமான்ஷு நர்வால் இடையே டாஸ்-அப் இருக்கும். மற்ற இரண்டு ரைடர்களை விட செல்வமணிக்கு அனுபவம் அதிகம் என்பதால், அவர் தொடக்க 7ல் இடம்பெற வேண்டும். செல்வமணி முந்தைய பிகேஎல் சீசனில் இடம்பெறவில்லை என்றாலும், அவர் 58 போட்டிகளில் 160 புள்ளிகளைப் பெற்ற இந்த லீக்கின் மூத்த வீரர் வலம் வருகிறார்.
லெஃப்ட் கார்னர் - சாஹில் குலியா
சாஹில் குலியா கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் டிஃபென்ஸ் பிரிவில் விளையாடி 23 போட்டிகளில் 57 புள்ளிகள் எடுத்தார். குலியா 47% வெற்றி விகிதத்தைக் கொண்டிருந்தார். சீசன் 8 உடன் ஒப்பிடும்போது அவரது எண்ணிக்கை மிகவும் மேம்பட்டுள்ளது. அதில் அவர் 30 புள்ளிகளைப் பெற்றார் மற்றும் 38% என்ற டேக்கிள் ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருந்தார். இந்த சீசனில் அவர் தனது எண்ணிக்கையை மேலும் மேம்படுத்த ஆர்வமாக இருப்பார். அவர் தமிழ் தலைவாஸின் கேம்-சேஞ்சராக இருப்பார் என்றும் எதிர்பார்க்கலாம்.
ரைட் கார்னர் - சாகர் ரதி
சாகர் ரதி கடந்த சீசனில் 17 போட்டிகளில் விளையாடி 53 புள்ளிகளைப் பெற்றார். அவர் போட்டி முழுவதும் காயமின்றி இருந்திருந்தால் அதிக புள்ளிகளைப் பெற்றிருக்க முடியும். இந்த சீசனுக்கு முன்னதாக ரதீ தனது உடற்தகுதியில் பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அவர் தமிழ் தலைவாஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
Alexa, play ‘Surviva’!#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas pic.twitter.com/bbt44qhBDv
— Tamil Thalaivas (@tamilthalaivas) October 13, 2023
தமிழ் தலைவாஸ் அணியின் உத்தேச ஆடும் 7
நரேந்திர கண்டோல், மோஹித் ஜாகர், எம் அபிஷேக், அஜிங்க்யா பவர், செல்வமணி கே, சாஹில் குலியா மற்றும் சாகர் ரதி.
தமிழ் தலைவாஸ் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி. அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வருகிற டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
— Tamil Thalaivas (@tamilthalaivas) October 20, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.