Advertisment

ஒரே ஆட்டத்தில் 21 புள்ளிகள்... ஆச்சரியம் கொடுத்த அஜிங்க்யாவை புகழ்ந்த கேப்டன்!

தபாங் டெல்லிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ் தலைவாஸ் அணியின் அஜிங்க்யா பவார் அதிகபட்சமாக 21 புள்ளிகளை குவித்தார்.

author-image
Martin Jeyaraj
New Update
Tamil Thalaivas skipper Sagar praise for teammate Ajinkya Pawar tamil news

தமிழ் தலைவாஸ் அணி 42-31 என்கிற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

Tamil-thalaivas | pro-kabaddi-league: 12 அணிகள் களமாடி வரும் 10-வது புரோ கபடி லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு தொடங்கியது. இதில் தொடக்க லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதிய நிலையில், குஜராத் அணி 38-32 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

Advertisment

இதைத்தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான யு மும்பா அணி 34-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாசை வீழ்த்தியது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 18-14 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

2-வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணியில் அஜிங்க்யா பவார் சூறாவளியாக சுழன்றடித்து புள்ளிகளை அள்ளினார். இதனால் தமிழ் தலைவாஸ் அணியின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தது. இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 42-31 என்கிற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது. 

தபாங் டெல்லிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ் தலைவாஸ் அணியின் அஜிங்க்யா பவார் அதிகபட்சமாக 21 புள்ளிகளை குவித்தார். இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் சாகர் தனது சக வீரர் அஜிங்க்யா பவாரை பாராட்டி மகிழ்ந்தார். "அவர் அணியில் ஆச்சரியம் கொடுக்கக் கூடியவர்" என்று கூறி புகழ்ந்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment