/indian-express-tamil/media/media_files/2025/10/17/tamil-thalaivas-vs-dabang-delhi-pkl-season-12-match-92-updates-in-tamil-2025-10-17-17-16-28.jpg)
தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி, பி.கே.எல் சீசன் 12, போட்டி 92, டெல்லி.
12 அணிகள் களமாடும் 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற புரோ கபடி லீக் தொடரின் 92-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதியது. இதில், சிறப்பாக விளையாடிய தபாங் டெல்லி அணி 37-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 11-வது தோல்வி ஆகும்.
இந்த சீசனில் இதுவரை 16 போட்டிகளில் ஆடியுள்ள அர்ஜுன் தேஷ்வால் தலைமையிலான தமிழ் தலைவாஸ், 6 போட்டியில் வெற்றி, 10 போட்டிகளில் தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், 15 போட்டிகளில் ஆடியுள்ள ஃபாஸல் அட்ராச்சலி தலைமையிலான தபாங் டெல்லி 12 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்த சீசனில் போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்க 'பிளே-இன்' (Play-in) என்ற தகுதிச் சுற்று என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படியில், முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக பிளே-ஆஃப் (Play-offs) சுற்றுக்குத் தகுதி பெறும். 5, 6, 7 மற்றும் 8-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள், 'பிளே-இன்' என்ற தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். தற்போது 8-வது இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் வலுவாக உள்ள தபாங் டெல்லியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியுடன் கடைசி லீக் போட்டியையும் வெல்லும் பட்சத்தில் பிளே-இன் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், இந்தப் போட்டியில் அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்
புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகள் இதுவரை 12 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள்ன. அதில் 8 முறை தபாங் டெல்லியும், 2 முறை தமிழ் தலைவாஸ் அணியும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. இவ்விரு அணிகள் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் தபாங் டெல்லி 3 முறை வென்றுள்ளது. தமிழ் தலைவாஸ் ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. மற்றொரு போட்டி சமனில் முடிந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.