/indian-express-tamil/media/media_files/2025/10/27/karthika-kabadi-2025-10-27-12-31-25.jpg)
ஆசிய இளையோர் விளையாட்டு கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்துள்ள சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகா என்ற வீராங்கணைக்கு, தமிழக அரசின் சார்பில் ரூ25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பக்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில், கபடி பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியது. இந்த அணியில், துணைக்கேப்டனாக இந்திய அணி வெற்றிபெற முக்கிய பங்காற்றியவர் தான் கார்த்திகா. சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த இவர், சிறப்பாக விளையாடி அசத்திய நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும், சொந்த ஊர் திரும்பிய அவருக்கு கபடி வீரர்கள், மக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
இதனிடையே ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு, தமிழக அரசின் சார்பில் ரூ25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு படித்து வரும் கார்த்திகா தனது முதல் போட்டியிலேயே இந்தியா தங்கம் வெல்ல பெரிய அளவில் உதவியுள்ளார். அரசியல் தலைவர்கள், கபடி வீரர், வீராங்கனைகள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் அவருக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள ரூ25 லட்சம் பரிசுத்தொகை போதாது என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
குகேஷ்க்கு 5 கோடி கொடுத்த முக.ஸ்டாலின் அரசு கார்த்திகாவிற்கு 25 லட்சம் மட்டுமே கொடுக்கிறது.
— கபிலன் (@_kabilans) October 26, 2025
ஒடுக்கப்பட்ட இரு இடத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு உடல் உழைப்பை அதிகம் செலுத்த வேண்டிய விளையாட்டான கபடியை தேர்ந்தெடுத்து விளையாடி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த… pic.twitter.com/Zh3FV7sJ6R
குகேஷுக்கு ரூ. 5 கோடி ஆனால் கார்த்திகாவுக்கு வெறும் ரூ.25 லட்சமா?
— DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@DMK_Updates) October 26, 2025
கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், உலக அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம்/பரிசு வெல்பவர்கள், போலவே ஆசிய அளவில், தேசிய அளவில், மாநில அளவில் வெல்பவர்கள் என்று முறையே ஊக்கத்தொகை… pic.twitter.com/Tc9BRT7VLT
இதனிடையே உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் தங்கம் வென்ற ககுஷ்க்கு தமிழக அரசு ரூ 5 கோடி ஊக்கத்தொகையாக அறிவித்தது. செஸ் வீரர்கள் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லும்போது அவர்களுக்கு அரசின் சார்பில் ரூ50 லட்சம் ஊக்கத்தொகையாக வழக்குவது தான் வழக்கம். அரசின் அறிக்கையிலும் இந்த தொகை தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குகேஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபோது தமிழக அரசு 10 மடங்கு உயர்த்தி அவருக்கு ரூ5 கோடி ஊக்கத்தொகையை வழங்கியது.
குகேஷ் உலக சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றார், தனி நபர் ஆட்டம், 5 கோடி பரிசுத் தொகை. ஆனால் தங்கை கார்த்திகா ஆசிய இளையோர் கபடி போட்டியில், குழு விளையாட்டில் தங்கம் வென்றார். இரண்டும் வேறு தான். புரிந்துகொள்கிறேன்.
— Pravin (@PravinTweets1) October 26, 2025
குகேஷின் வெற்றி அபாரமானது, தகுதியானப் பரிசு. அவர் மேலும்… pic.twitter.com/ldFGQH2Xc1
அதே சமயம் ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றால் தமிழக அரசின் அறிவிப்பு படி ரூ15 லட்சம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். குகேஷ்க்கு அளித்ததுபோல் 10 மடங்கு உயர்த்தி கொடுத்தால், கார்த்திகாவுக்கு ரூ1.50 லட்சம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு ரூ25 லடசம் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சமூக ஆர்வலர்கள் நெட்டிசன்கள் என பலரும் கார்த்திகாவுக்கு ஊக்கத்தொகை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us