டீம் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது பதவியை, கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
இதன்பின், வீரேந்திர சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்ட் பைபஸ், டோத்தா கணேஷ், ரவி சாஸ்திரி, வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர்.
அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிப்பதில் பிசிசிஐ-யின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழு குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், கிரிக்கெட் ஆலசோனைக் குழு இடம்பெற்றுள்ள சவுரவ் கங்குலி இன்று அளித்துள்ள பேட்டியில், "வரும் ஜுலை 10-ஆம் தேதி நடக்கும் நேர்முகத் தேர்வில், தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார்" என தெரிவித்துள்ளார்.