இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிக்கான அணி அறிவிப்பு! அஷ்வினுக்கு ரெஸ்ட்?

முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியாவுடன் மோதுகிறது.

முதலில் இரு அணிகளும் மோதும் ஒரேயொரு பயிற்சி ஆட்டம் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. அதன் பிறகு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சென்னையில் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. 2வது போட்டி கொல்கத்தாவிலும், 3வது போட்டி இந்தூரிலும், 4வது போட்டி பெங்களூருவிலும், 5வது போட்டி நாக்பூரிலும் நடைபெறுகிறது.

அதன்பின், அக்டோபர் 7-ஆம் தேதி இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி20 தொடர் தொடங்குகிறது.

இந்த நிலையில், முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியில் தோனி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரஹானே, லோகேஷ் ராகுல், புவனேஷ்குமார், உமேஷ் யாதவ், முகமது சமி, யுவேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், பும்ரா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்ற சர்துல் தாகூர் நீக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Team india squad announced for first three odis against australia

Next Story
அமெரிக்க ஓபன் டென்னிஸ்… பட்டம் வென்றார் ஸ்டீபன்ஸ்!Madison Keys, Sloane Stephens, US Open,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com